சத்தீஸ்கரில் நக்சலைட்டுகளுடன் துப்பாக்கிச் சண்டை: பாதுகாப்பு படை வீரர்கள் 2 பேர் பலி

சத்தீஸ்கர் மாநிலத்தில் நக்சலைட்டுகளுக்கும் பாதுகாப்பு படை வீரர்களுக்கும் இடையே நடைபெற்ற துப்பாக்கிச் சண்டையில் 2 பாதுகாப்பு படை
சத்தீஸ்கரில் நக்சலைட்டுகளுடன் துப்பாக்கிச் சண்டை: பாதுகாப்பு படை வீரர்கள் 2 பேர் பலி
Updated on
1 min read


ராய்ப்பூர்: சத்தீஸ்கர் மாநிலத்தில் நக்சலைட்டுகளுக்கும் பாதுகாப்பு படை வீரர்களுக்கும் இடையே நடைபெற்ற துப்பாக்கிச் சண்டையில் பாதுகாப்பு படை வீர்ர்கள் 2 பேர் உயிரிழந்தனர். ஒரு வீரர் காயமடைந்துள்ளதாக என தகவல் வெளியாகி உள்ளது. 

சத்தீஸ்கர் மாநிலம் கான்கெர் மாவட்டத்தில் உள்ள வனப்பகுதியில் இன்று அதிகாலை 3.45 மணிக்கு காலை பாதுகாப்பு படையினருக்கும், நக்சலைட்டுகளுக்கும் இடையே துப்பாக்கிச்சண்டை நடந்தது. சில மணி நேரம் நீடித்த இந்த சண்டையில் 2 எல்லை பாதுகாப்பு படை வீரர்கள் உயிரிழந்ததாக தகவல்கள் வெளியாகி உள்ளன. 

மேலும், ஒரு வீரர் படுகாயங்களுடன் சிகிச்சைக்காக மருத்துவமனையில்  அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும், உயிரிழந்த வீரர்களின் உடல்கள் பாகஞ்ஜோரில் உள்ள பாதுகாப்புப் படைப்பிரிவு தலைமை அலுலவகத்திற்கு கொண்டு செல்லப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com