

புதுதில்லி: பாஜகவுக்கு எதிராக கட்சிகள் ஒன்றிணைவது தனக்கு மகிழ்ச்சி அளிப்பதாக தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவார் கூறினார்.
2019-அம் ஆண்டு மக்களவைத் தேர்தலை எதிர்நோக்கி பாஜகவுக்கு எதிராக வலுவான கூட்டணி அமைக்க மாநில கட்சிகள் முனைப்பு காட்டி வருகின்றன.
இந்நிலையில், தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவார் செய்தியாளர்களிடம் பேசுகையில், பாஜகவுக்கு எதிராக தேசிய கட்சிகள் ஒன்றிணைவது சேர்வது தனக்கு மகிழ்ச்சி அளிக்கிறது.
நாட்டில் ஜனநாயகம் மீட்கப்பட்டு மேம்பட வேண்டும். பாஜகவுக்கு எதிராக ஒன்று சேரும் எதிர்க்கட்சிகள் வகுக்கும் திட்டத்திற்கு தனது ஆதரவு உண்டு என்று சரத்பவார் கூறினார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.