ஆஸ்கர் விருது விழா கோலாகலம்! தென் தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புவெனிசுலா: 7 ஆண்டுகளுக்குப் பின் அமெரிக்க தூதரகம் மீண்டும் திறப்புயாருடன் கூட்டணி? : இன்று அறிவிக்கிறார் ராமதாஸ்11 மாநிலங்களவை இடங்களுக்கு இன்று தோ்தல்குழாய் எரிவாயு இணைப்பு பெற்றவர்களுக்கு சிலிண்டர் கிடையாது: மத்திய அரசு
/

கர்நாடகாவில் 13,000 ஏக்கர் பரப்பளவில் 2,000 மெகாவாட் சூரிய மின்சக்தி பூங்கா தொடக்கம்

கர்நாடக மாநிலம் துமகுரு மாவட்டத்தில் உள்ள பவகாடாவில் 2,000 மெகாவாட் சூரிய மின்சக்தி பூங்கா தொடங்கப்பட்டது.

News image
Updated On :1 மார்ச் 2018, 1:15 pm

DIN

கர்நாடக மாநிலம் துமகுரு மாவட்டத்தில் உள்ள பவகாடாவில் 2,000 மெகாவாட் சூரிய மின்சக்தி பூங்கா தொடங்கப்பட்டது. இதனை தொடங்கி வைத்து பேசிய முதல்வர் சித்தராமையா 

நாட்டின் புதுப்பிக்கத்தக்க ஆற்றல் உற்பத்தியில் மூன்றாவது மிகப்பெரிய மாநிலமாக "கர்நாடகா விளங்குகிறது. 
மாநிலத்தில் உள்ள 20 சதவீத மக்களின் மின்சார தேவையை இதன் மூலம் பூர்த்தி செய்வது எமது இலக்கு.  
எதிர்காலத்தில், கர்நாடகா மின் உற்பத்தியில் உபரி மாநிலமாக இருக்கும் என்று முதல்வர் சித்தராமையா  கூறினார். மேலும் ஐந்து கிராமங்களில் 13,000 ஏக்கர் பரப்பளவில் சூரிய மின்சக்தி உற்பத்தி பூங்கா 16,500 கோடி ரூபாய் முதலீட்டில் அமைக்கப்பட்டுள்ளது.

பவகாடா பகுதியில் உள்ள விவசாயிகளிடம் இருந்து நிலங்களை குத்தகைக்கு எடுத்து பங்குதாரர்களாக சேர்க்கப்பட்டுள்ளனர் என்று மாநிலத்தின் எரிசக்தி அமைச்சர் டி.கே.சுவகுமார் கூறினார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.