கீழடி உள்பட 8 இடங்களில் அகழாய்வுக்கு மத்திய அரசு அனுமதி! கீழடி உள்பட 8 இடங்களில் அகழாய்வுக்கு மத்திய அரசு அனுமதி! ஆப்கனில் மருத்துவமனை மீது பாகிஸ்தான் ஏவுகணைத் தாக்குதல்! 400 பேர் பலி!!தோ்தல் நடத்தை விதிகள்: கடுமையாக அமல்படுத்த உத்தரவு!எரிவாயு உருளை தட்டுப்பாடு: மின்நுகா்வு அதிகரிப்பு!இந்திய ஏற்றுமதி பிப்ரவரி மாதத்தில் ரூ. 3.37 லட்சம் கோடியாக சரிவு!8 எதிா்க்கட்சி எம்.பி.க்களின் இடைநீக்க உத்தரவு: இன்று திரும்பப்பெற வாய்ப்பு!24 மணி நேரத்தில் சென்றடையும் விரைவு தபால் சேவை: மத்திய அரசு இன்று அறிமுகம்!ஈரான் போர்: ஆடை விலையை 5% உயா்த்த உற்பத்தியாளா்கள் முடிவு
/

காவிரி வாரியமா, குழுவா, ஆணையமா என்பது குறித்து உச்சநீதிமன்றம் அறிவுறுத்த வேண்டும்: மத்திய அரசு

காவிரி பிரச்னையில் வாரியம், குழு அல்லது ஆணையம்  ஆகியவற்றில் ஒன்றை அமைக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது.

News image
Updated On :14 மே 2018, 6:42 am

DIN

காவிரி பிரச்னையில் வாரியம், குழு அல்லது ஆணையம்  ஆகியவற்றில் ஒன்றை அமைக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இதற்கான வரைவு திட்டத்தை மத்திய நீர் வளத்துறை செயலாளர் யூ.பி சிங் உச்சநீதிமன்றத்தில் நேரில் ஆஜராகி இன்று தாக்கல் செய்தார். 

அதில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது:- உருவாக்கப்படும் நீர்ப் பங்கீட்டு அமைப்பு 10 பேர் கொண்டதாக இருக்கும். காவிரி நடுவர் மன்றம் கூறிய பணிகளை காவிரி அமைப்பு மேற்கொள்ளும் ஒவ்வொரு மாநிலத்தில் இருந்தும் ஒரு உறுப்பினர் காவிரி அமைப்பில் இருப்பார் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

காவிரி வாரியமா, குழுவா, ஆணையமா என்பது குறித்து உச்சநீதிமன்றம் அறிவுறுத்த வேண்டும். மத்திய அரசு அமைக்கும் காவிரி அமைப்பு தலைவரின் பதவிக்காலம் 5 ஆண்டு அல்லது 65 வயதுவரை காவிரி அமைப்பின் தலைவர் பதவியில் நீடிப்பார்.  10 பேர் கொண்ட நீர்ப் பங்கீட்டு அமைப்பில் யு.பி.சிங்கும் இடம்பெறுவார். 10 பேர் கொண்ட அமைப்பில் இருவர் முழுநேர உறுப்பினர்களாக செயல்படுவர் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

மேலும் காவிரி வரைவு செயல் திட்டத்திற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கிய பின் அரசிதழில் வெளியிடப்படும் என மத்திய நீர் வளத்துறை செயலாளர் யூ.பி சிங் கூறியுள்ளார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.