பாக். மூலம் அமெரிக்காவுடன் தொடரும் பேச்சு! - ஈரான் அரசு அறிவிப்பு!அதிமுக அரசின் ஏதாவது ஒரு சாதனையைக் கூறி பழனிசாமியால் ஓட்டு கேட்க முடியுமா? மு.க. ஸ்டாலின்தேர்தல் முக்கியமல்ல, சுயமரியாதையே முக்கியம் : மு.க. ஸ்டாலின் உ.பி.யில் 17 வயது சிறுமிக்கு கூட்டுப் பாலியல் வன்கொடுமை! தூக்கிட்டுத் தற்கொலை!சிபிஎஸ்இ 10-ஆம் வகுப்புப் பொதுத் தேர்வு முடிவுகள் வெளியீடுமீஞ்சூரில் மாணவியிடம் பாலியல் அத்துமீறல்! அரிவாளால் வெட்டிய இளைஞர்கள்! திமுக தோற்க வேண்டும் என ராகுல் நினைக்கிறார்: அண்ணாமலை பேச்சுதொகுதி மறுவரையறை! தமிழ்நாட்டில் நாளை கருப்புக் கொடிப் போராட்டம்! - மு.க. ஸ்டாலின் அறிவிப்பு
/

மேற்குவங்க மாநிலத்தில் உள்ளாட்சி தேர்தலுக்கான வாக்குப் பதிவு தொடங்கியது

மேற்குவங்க மாநிலத்தில் உள்ளாட்சி தேர்தலுக்கான வாக்குப் பதிவு இன்று காலை 7 மணிக்கு தொடங்கியது. 

News image
Updated On :14 மே 2018, 2:11 am

மேற்குவங்க மாநிலத்தில் உள்ளாட்சி தேர்தலுக்கான வாக்குப் பதிவு இன்று காலை 7 மணிக்கு தொடங்கியது. 

மேற்கு வங்கத்தில் 621 ஜில்லா பரிஷத்துகளுக்கும், 6,157 உள்ளாட்சி சமிதிகளுக்கும், 31,827 கிராம பஞ்சாயத்துகளுக்கும் இன்று தேர்தல் நடக்கிறது. இதற்கான வாக்குப்பதிவு பலத்த போலீஸ் பாதுகாப்புடன் காலை 7 மணிக்கு தொடங்கியது. 

அஸ்ஸாம், ஒடிஸா, ஆந்திரப் பிரதேசம், சிக்கிம் ஆகிய மாநிலங்களில் இருந்து சுமார் 1,500 பாதுகாப்புப் படை வீரர்கள் மேற்கு வங்கத்துக்கு பாதுகாப்புப் பணிகளுக்காக வரவழைக்கப்பட்டுள்ளனர்.

மேற்கு வங்க மாநிலத்தில் 58 ஆயிரத்திற்கும் அதிகமான உள்ளாட்சி பதவிகள் உள்ளன. இவற்றில் 38,605 இடங்களில் இன்று தேர்தல் நடைபெற உள்ளது. இதில், 3,358 கிராம பஞ்சாயத்துகளில் 16,814 இடங்களில் யாரும் போட்டியிடவில்லை. 341 பஞ்சாயத்து சமிதிகளில், 3,059 இடங்களில் யாரும் போட்டியிடவில்லை. அதனால் இந்தப்பகுதிகளில் வாக்குப்பதிவு நடைபெறாது. மீதமுள்ள 621 ஜில்லா பரிஷத், 6,157 பஞ்சாயத்து சமிதிகள், 31,827 கிராம பஞ்சாயத்துகளில்  இன்று வாக்குப்பதிவு நடக்கிறது.

உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிடுவதற்கான வேட்பு மனு தாக்கல் ஏப்ரல் 2-ஆம் தேதி முதல் ஏப்ரல் 9-ஆம் தேதி வரை நடைபெற்றது. பின்னர் அந்த மாதம் 23-ஆம் தேதி வேட்பு மனு தாக்கல் செய்வதற்கான காலக்கெடு நீட்டிக்கப்பட்டது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.