தமிழக அமைச்சரவையில் காங்கிரஸ்: மகிழ்ச்சி அளிக்கிறது - ப.சிதம்பரம்அமைச்சரவையில் எந்தத் துறை அளித்தாலும் மகிழ்ச்சி: கிரிஷ் சோடங்கர்தமிழக அமைச்சரவையில் காங்கிரஸ்: அரசியல் நிகழ்வு அல்ல, உணர்வு! - மாணிக்கம் தாகூர்நீர்நிலைகளில் வண்டல் மண் எடுத்துச்செல்ல விவசாயிகளுக்கு அனுமதி!தவெக அமைச்சரவையில் காங்கிரஸின் ராஜேஷ் குமார், விஸ்வநாதனுக்கு அமைச்சர் பதவி! டிஜிபி வெங்கடராமன் உள்பட 15 ஐபிஎஸ் அதிகாரிகள் மாற்றம்!கேரளத்தில் சில்வர் லைன் அதிவேக ரயில் வழித்தட திட்டம் ரத்து தமிழகத்தின் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்டை தாண்டி வெப்பநிலை பதிவு!
/

காஷ்மீரில் இன்று உள்ளாட்சி தேர்தல்: முதல்கட்ட வாக்குப்பதிவு துவங்கியது

ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் உள்ளாட்சித் தேர்தலின் முதல்கட்ட வாக்குப்பதிவு இன்று திங்கள்கிழமை துவங்கி நடைபெற்று வருகிறது. 

News image
Updated On :8 அக்டோபர் 2018, 8:35 am IST


ஸ்ரீநகர்: ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் உள்ளாட்சித் தேர்தலின் முதல்கட்ட வாக்குப்பதிவு இன்று திங்கள்கிழமை துவங்கி நடைபெற்று வருகிறது. 

ஆளுநர் ஆட்சி நடைபெற்று வரும் "ஜம்மு காஷ்மீரில் 13 ஆண்டுகளுக்கு பிறகு 1,145 வார்டுகளுக்கு 4 கட்டங்களாக வாக்குப்பதிவு நடக்கிறது. முதற்கட்டமாக இன்று (திங்கட்கிழமை) 422 வார்டுகளுக்கு முதல்முறையாக மின்னணு வாக்கு எந்திரத்தில் வாக்குப்பதிவு இன்று திங்கள்கிழமை காலை 7 மணியளவில் தொடங்கி நடைபெற்று வருகிறது. இதில் ஜம்முவில் 247, காஷ்மீரில் 149, லடாக்கில் 26 வார்டுகளுக்கு தேர்தல் நடைபெறுகிறது. அவற்றில் மொத்தமாக 1,283 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். ஜம்முவில் 584, ரஜெளரியில் 61, பூஞ்ச் மாவட்டத்தில் 26 என மொத்தம் 671 வாக்குச் சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன.

இதனிடையே, வாக்குப்பதிவு நடைபெறும் பகுதிகளுக்கு மாநில அரசு உள்ளூர் விடுமுறை அறிவித்துள்ளது. முதல்கட்ட தேர்தலையொட்டி, சம்பந்தப்பட்ட பகுதிகளில் பலத்த பாதுகாப்புகள் போடப்பட்டுள்ளது. பதற்றம் மிகுந்தவையாக கண்டறியப்பட்டு உள்ள 26 வாக்குச்சாவடிகளில் கூடுதலாக பாதுகாப்பு படைவீரர்கள் மற்றும் ராணுவ வீரர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். வாக்குப்பதிவு மாலை 4 மணி வரை  நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 

மக்கள் ஜனநாயக கட்சி மற்றும் தேசிய மாநாட்டு கட்சி ஆகிய இரு முக்கிய கட்சிகளும் இந்த உள்ளாட்சி தேர்தலை புறக்கணித்து இருப்பது குறிப்பிடத்தக்கது.

ஜம்மு காஷ்மீர் விடுதலை முன்னணி தலைவர் யாசின் மாலிக், ஹுரியத் மாநாட்டுக் கட்சித் தலைவர் சையது அலி ஷா கிலானி ஆகியோர் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கடந்த 2-ஆம் தேதி முதல் வீட்டுக் காவலில் வைக்கப்பட்டுள்ள நிலையில், தற்போது மிதவாத ஹுரியத் மாநாட்டுக் கட்சித் தலைவர் மீர்வாய்ஸ் உமர் ஃபரூக் நேற்று ஞாயிற்றுக்கிழமை முதல் வீட்டுக் காவலில் வைக்கப்பட்டுள்ளார். இந்த 3 பிரிவினைவாத கட்சித் தலைவர்களும் தேர்தலை புறக்கணிக்க அழைப்பு விடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

வேட்பாளர்களுக்கு தீவிரவாதிகளிடம் இருந்து அச்சுறுத்தல் இருப்பதால் அவர்கள் அனைவரும் போலீசாரின் பாதுகாப்பு வளையத்துக்குள் கொண்டு வரப்பட்டு உள்ளனர்.

இதற்கிடையில், சோபியான் மாவட்டத்தில் உள்ள 6 கிராமங்களில் பாதுகாப்பு படையினர் மற்றும் போலீஸார் பயங்கரவாதிகளை பிடிப்பதற்கான தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.