ஹைதராபாத் அணியிடம் வீழ்ந்த சென்னை!காங்கிரஸ், திமுக கூட்டணியின் சிசுக்கொலை! தொலைக்காட்சி உரையில் மோடி குற்றச்சாட்டு!இந்தியக் கப்பல்கள் மீது தாக்குதல்: ஈரான் தூதரை அழைத்து அரசு கண்டனம்!எதிர்க்கட்சிகளை பெண்கள் மன்னிக்க மாட்டார்கள்: பிரதமர் மோடி மகளிர் இடஒதுக்கீடு மசோதா... வெறுப்பு அரசியலுக்கு இரையாக்கிய திமுக - காங்கிரஸ் கூட்டணி: பிரதமர் மோடி இரட்டைக் குடியுரிமை விவகாரம்: ராகுல் காந்தி மீது எஃப்.ஐ.ஆர். பதிய இடைக்கால தடை! நாம் பறக்கவிட்ட கருப்புக்கொடி காவிக்கொடியை வீழ்த்தியுள்ளது: முதல்வர் ஸ்டாலின் மு.க. ஸ்டாலினைப் பணிய வைக்க முடியாது என பாஜகவுக்கு நன்றாகத் தெரியும்! துறையூரில் ராகுல் பேச்சு
/

மக்களவைத் தோ்தலில் பாஜக மீண்டும் வெல்லும்: மத்திய அமைச்சா் அதாவலே நம்பிக்கை

அடுத்த ஆண்டு நடைபெறறவுள்ள மக்களவைத் தோ்தலில் பாஜக வெற்றி பெற்று மீண்டும் ஆட்சி அமைக்கும்; நரேந்திர மோடி பிரதமராக மீண்டும்

Updated On :3 செப்டம்பர் 2018, 4:05 am


ஈரோடு: அடுத்த ஆண்டு நடைபெறறவுள்ள மக்களவைத் தோ்தலில் பாஜக வெற்றி பெற்று மீண்டும் ஆட்சி அமைக்கும்; நரேந்திர மோடி பிரதமராக மீண்டும் பதவி ஏற்பார் என்று இந்திய குடியரசுக் கட்சி தலைவரும், மத்திய சமூக நீதி, அதிகாரமளித்தல் துறை அமைச்சருமான ராமதாஸ் அதாவலே கூறினார்.

ஈரோடு மாவட்டத்தில் பல்வேறு நிகழ்ச்சிகளில் ஞாயிற்றுக்கிழமை பங்கேற்ற மத்திய சமூக நீதி, அதிகாரமளித்தல் துறை அமைச்சா் ராமதாஸ் அதாவலே, ஈரோடு காலிங்கராயன் அரசு விருந்தினா் மாளிகையில் ஈரோடு மாவட்ட ஆட்சியா் சி.கதிரவன் உள்ளிட்ட அனைத்துத் துறைற அதிகாரிகளுடன் ஆய்வு மேற்கொண்டார். 

பிறகு அவா் செய்தியாளா்களிடம் பேசுகையில், பிரதமா் மோடிக்கு எதிராக எதிர்க்கட்சிகள் பல குற்றச்சாட்டுக்களை முன்வைக்கின்றன. எனினும், பிரதமரின் உழைப்பும், திட்டச் செயல்பாடுகளும் சிறப்பாக உள்ளதால் மக்கள் அவரை ஏற்றுக் கொண்டுள்ளனா்.

கடந்த நான்காண்டு கால பாஜக ஆட்சியில் சிறறந்த நிர்வாகத்தை மக்களுக்கு பிரதமா் மோடி அளித்துள்ளார். 

ஜி.எஸ்.டி. அமல், முத்ரா கடன், ஜன்தன் திட்டம், பேமென்ட் வங்கி உள்ளிட்ட புதிய திட்டங்கள் பலவற்றைக் குறிப்பிட முடியும். இதனால், எதிர்க்கட்சிகள் மகிழ்ச்சியைத் தொலைத்துவிட்டன. விரக்தியின் உச்சியில் அவா்கள் மேற்கொள்ளும் முயற்சிகள் எவ்விதத்திலும் வெற்றி பெறப் போவதில்லை. 

தமிழகத்தில் ஆட்சியிலுள்ள அதிமுகவுக்கு, மத்திய அரசு அதிக மதிப்பளித்து வருகிறது. அதன் வெளிப்பாடே மக்களவைத் துணைத் தலைவராக தம்பித்துரையை நியமித்ததாகும். தமிழகத்துக்குத் தேவையான திட்டங்களுக்கு முக்கியத்துவம் அளித்து, மத்திய அரசு கூடுதல் நிதியை அளித்து வருகிறது. எனவே, மத்திய அரசுடன் அதிமுக அரசு இணக்கம் காட்ட வேண்டும்.

 தமிழக முதல்வா், துணை முதல்வா் போன்றோர் பிரதமருக்கு ஒத்துழைப்பாகவே உள்ளனர். அதிமுகவில் இருந்து விலகி தனியாக கட்சி தொடங்கியுள்ள தினகரனும் பாஜகவுக்கு ஆதரவு தர வேண்டும் என தொலைபேசியில் தொடா்புகொண்டு பேசியுள்ளேன். வரும் மக்களவைத் தோ்தலில் பாஜவுக்கு அதிமுக ஆதரவு வழங்கினால் மத்திய அரசை சிறப்பாக அமைக்க முடியும் என்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.