திருவண்ணாமலை: பேராசிரியர் மீதான பாலியல் புகாரை விசாரிக்கும் விசாரணைக்குழு முன்பு ஆஜராகி விளக்கம் அளிக்க பாதிக்கப்பட்ட மாணவிக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.
திருவண்ணாமலை மாவட்டம், தண்டராம்பட்டை அடுத்த வாழவச்சனூரில் அரசு வேளாண் கல்லூரி - ஆராய்ச்சி மையம் இயங்கி வருகிறது. இங்கு, பி.எஸ்சி., 2-ஆம் ஆண்டு படித்து வரும் சென்னை, பெருங்குடியைச் சேர்ந்த மாணவிக்கு கல்லூரி உதவிப் பேராசிரியர் தங்கபாண்டியன் பாலியல் தொந்தரவு கொடுத்து வந்தாராம்.
இதுகுறித்து, மாவட்ட முதன்மை அமர்வு நீதிபதி ஜி.மகிழேந்தி அளித்த அறிக்கையின் அடிப்படையில், கூடுதல் காவல் கண்காணிப்பாளர் வனிதா தலைமையிலான போலீஸார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்த விசாரணைக் குழுவிடம் கடந்த திங்கள்கிழமை மாணவி நேரில் ஆஜராகி, தன்னிடமிருந்த அனைத்து ஆதாரங்களையும் அளித்தார்.
இந்நிலையில், இன்று திங்கள்கிழமை பிற்பகல் 1 மணிக்கு (செப் 3) நேரில் ஆஜராகி விளக்கம் தர வேண்டும் என வேளாண் பல்கலை. விசாரணைக்குழு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
பாமரரையும் பட்டணத்தில் உள்ளோரையும் இணைக்கும் உன்னத விழா: ஆளுநர்

தமிழகத்தில் என்டிஏ கூட்டணி மிகப்பெரிய வெற்றியைப் பெறும்: எல்.முருகன்

பேரணாம்பட்டு பகுதியில் கனமழை: மின்னல் பாய்ந்து சிறுவன் பலி

வார பலன்கள் (மே 1 - 7) 12 ராசிகளுக்கும்! குழப்பம் நீங்கும் கடக ராசிக்கு!
வீடியோக்கள்

Dinamani வார ராசிபலன்! | May 3 முதல் 9 வரை! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்! | Weekly Horoscope
இணையதளச் செய்திப் பிரிவு
Podcast | Exit Polls சொல்வது நடக்குமா? | News and Views | Epi - 30
தினமணி செய்திச் சேவை

Kara Movie Review | Dhanush - Vignesh Raja கூட்டணி வெல்லுமா? | Dinamani Talkies
இணையதளச் செய்திப் பிரிவு
குடிநீர் குழாய் வேண்டாம்!! ஊற்றுத்தண்ணீரை விரும்பும் கிராம மக்கள்! | Pudukottai
இணையதளச் செய்திப் பிரிவு

