தமிழகத்தில் பெண்களுக்கான பாதுகாப்பு கவலை அளிக்கிறது : பிரதமர் மோடி மாற்றத்திற்கானது தே.ஜ. கூட்டணி : பூத் கமிட்டி உறுப்பினர்களுடன் பேசிய பிரதமர் மோடிஅஸ்ஸாம் முதல்வர் ஊழல்வாதி: ராகுல் காந்தி விமர்சனம் வாக்குச்சாவடிகளில் வாக்காளர்களுக்கு பயோ-மெட்ரிக் முறை! உச்ச நீதிமன்றம் நோட்டீஸ் சாத்தூர் பட்டாசு ஆலை விபத்து! ஒருவர் பலி; மூவர் படுகாயம்! திருப்பூரில் நாளை விஜய் சாலைவலம், பிரசாரத்துக்கு அனுமதி! ஹோர்முஸ் நீரிணை இன்றே முற்றுகை! டிரம்ப் அறிவிப்பு கச்சா எண்ணெய் விலை 7% உயர்வு! மீண்டும் 100 டாலரைத் தாண்டியது!
/

ஈரான் ராணுவ அணிவகுப்பில் நடத்தப்பட்ட தாக்குதலில் 24 பேர் பலி; 53 பேர் காயம்

ஈரான் ராணுவ அணிவகுப்பில் பயங்கரவாதிகள் நடத்திய கொடூரத் தாக்குதலில் ராணுவ வீரர்கள், பொதுமக்கள் என 24 பேர் உயிரிழந்தனர். 53 பேர்

News image
Updated On :22 செப்டம்பர் 2018, 11:07 am


ஈரான்: ஈரான் ராணுவ அணிவகுப்பில் பயங்கரவாதிகள் நடத்திய கொடூரத் தாக்குதலில் ராணுவ வீரர்கள், பொதுமக்கள் என 24 பேர் உயிரிழந்தனர். 53 பேர் காயமடைந்தனர் என தகவல் வெளியாகி உள்ளது.  

1980 முதல் 1988 வரை நடந்த ஈரான்-ஈராக் போர் தொடங்கியதன் நினைவாக, ஈரான் ஆவாஸ் நகரில் இன்று நடைபெற்ற ராணுவ அணிவகுப்பின் போது ராணுவ அதிகாரிகள் போன்று மாறுவேடமிட்டு மோட்டார் வாகனத்தில் வந்த 4 மர்ம நபர்கள் அருகில் உள்ள பூங்காவில் இருந்து துப்பாக்கிச்சூடு நடத்தினர். இதில், பொதுமக்கள், இஸ்லாமிய புரட்சிகர பாதுகாப்பு படையினர் (ஐஆர்ஜிசி) உள்பட 24 பேர் உயிரிழந்தனர். ஒரு பெண் மற்றும் குழந்தைகள் உள்பட 53 பேர் காயமடைந்துள்ளனர். தாக்குதலில் ஈடுபட்ட பயங்கரவாதிகள் இருவர் சுட்டுக் கொல்லப்பட்டனர். மேலும் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். 

இந்த சம்பவத்திற்கு எந்தவொரு பயங்கரவாத குழுவும் பொறுப்பேற்கவில்லை.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.