சென்னையில் இன்றைய பெட்ரோல், டீசல் விலை நிலைவரம்
சென்னையில் இன்று திங்கள்கிழமை (ஆக 12) பெட்ரோல் விலையில் மாற்றமின்றியும், டீசல் லிட்டருக்கு 6 காசுகள் குறைந்து விற்பனை


சென்னை: சென்னையில் இன்று திங்கள்கிழமை (ஆக 12) பெட்ரோல் விலையில் மாற்றமின்றியும், டீசல் லிட்டருக்கு 6 காசுகள் குறைந்து விற்பனை செய்யப்படுகிறது.
சுமார் 15 ஆண்டுகளாக எண்ணெய் நிறுவனங்கள் சர்வதேச விலை நிலவரத்துக்கு ஏற்ப மாதம் இருமுறை பெட்ரோல் மற்றும் டீசல் விலையை மாற்றியமைக்கும் நடைமுறை கடந்த 2017 ஆம் ஆண்டு ஜூன் மாதம் கைவிடப்பட்ட நிலையில், நாள்தோறும் பெட்ரோல், டீசல் விலையை நிர்ணயித்து விற்பனை செய்ய எண்ணெய் நிறுவனங்களுக்கு மத்திய அரசு அனுமதி அளித்தது. அதன்படி, தினந்தோறும் பெட்ரோல், டீசல் விலை நிர்ணயிக்கப்பட்டு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
இந்நிலையில், எண்ணெய் நிறுவனங்கள் இன்று வெளியிட்டுள்ள அறிவிப்பில், சென்னையில் பெட்ரோல் நேற்றைய விலையில் இருந்து மாற்றமின்றி ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.74.78 ஆகவும், டீசல் நேற்றைய விலையில் இருந்து லிட்டருக்கு 6 காசுகள் குறைந்து ஒரு லிட்டர் டீசல் ரூ.69.13 ஆகவும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இந்த விலை காலை 6 மணி முதல் அமலுக்கு வந்துள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...