சென்னை: 2019-2020 ஆம் கல்வியாண்டிற்கான 10,11 மற்றும் 12-ஆம் வகுப்பு பொதுத்தேர்வுகளுக்கான கால அட்டவணையை பள்ளிக்கல்வித்துறை வெளியிட்டுள்ளது.
இதுகுறித்து அரசுத்தேர்வுகள் இயக்ககம் வெளியிட்டுள்ள அறிக்கையில், 2019-2020 ஆம் கல்வி ஆண்டில், நடைபெறவுள்ள அரசுப் பொதுத் தேர்வுகளான பத்தாம் வகுப்பு, பதினொன்றாம் வகுப்பு மற்றும் பன்னிரெண்டாம் வகுப்பு ஆகியவற்றுக்கான கால அட்டவணை மற்றும் தேர்வு முடிவுகள் வெளியிடப்படும் தேதி பற்றிய விவரங்கள் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி மார்ச் 2 ஆம் தேதி தொடங்கும் 12 ஆம் வகுப்பு தேர்வுகள் மார்ச் 24 ஆம் தேதியன்று முடிவடைகிறது.
பதினொன்றாம் வகுப்புகளுக்கான தேர்வுகள் மார்ச் 4 ஆம் தேதி தொடங்கி, மார்ச் 26 ஆம் தேதி நிறைவடைகிறது. மார்ச் 17 ஆம் தேதி துவங்கும் பத்தாம் வகுப்பு தேர்வுகள் ஏப்ரல் 9 ஆம் தேதி நிறைவடைகிறது.
தேர்வு முடிவு வெளியிடப்படும் தேதியை பொறுத்தவரை, ஏப்ரல் 24 ஆம் தேதியன்று 12 ஆம் வகுப்புக்கும், 11ஆம் வகுப்புக்கு மே 14 ஆம் தேதியும், மே 4 ஆம் தேதி பத்தாம் வகுப்புக்கும் தேர்வு முடிவுகள் வெளியிடப்படுகின்றன.
பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு அட்டவணை:
17.03.2020 - மொழித்தேர்வு - முதல் தாள்
19.03.2020 - மொழித்தேர்வு - இரண்டாம் தாள்
21.03.2020 - விருப்பமொழிப் பாடம்
27.03.2020 - ஆங்கிலம் - முதல் தாள்
30.03.2020 - ஆங்கிலம் இரண்டாம் தாள்
02.04.2020 - கணிதம்
07.04.2020 - அறிவியல்
09.04.2020 - சமூக அறிவியல்
பிளஸ் 1 பொதுத்தேர்வு கால அட்டவணை:
04.03.2020 - மொழிப்பாடம்
06.03.2020 - ஆங்கிலம்
11.03.2020 - கணக்கு, வணிகவியல், விலங்கியல்
13.03.2020 - கணினி அறிவியல்
18.03.2020 - இயற்பியல், பொருளாதாரம்
23.03.2020 - உயிரியல், வரலாறு, தாவரவியல்
26.03.2020 - வேதியல், கணக்குப்பதிவியல், புவியியல்
பிளஸ் 2 பொதுத்தேர்வு கால அட்டவணை:
02.03.2020 - மொழிப்பாடம்
05.03.2020 - ஆங்கிலம்
09.03.2020 - கணக்கு, வணிகவியல், விலங்கியல்
12.03.2020 - கணினி அறிவியல்
16.03.2020 - இயற்பியல், பொருளாதாரம்
20.03.2020 - உயிரியல். வரலாறு, தாவரவியல்
24.03.2020 - வேதியியல், கணக்குப்பதிவியல், புவியியல்
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

என்னுடைய அப்பாவை நினைத்து பெருமைப்படுகிறேன்! - ஹபீபி படத்தைப் பாராட்டிய தனுஷ்!
ஹாலிவுட்டில் பயிற்சி, அம்மாவின் சிபாரிசு... விஜய் நேர்காணல் - 3!

மாட் ரென்ஷா, டிம் டேவிட் அதிரடி: வங்கதேசத்துக்கு 197 ரன்கள் இலக்கு!

கொல்கத்தா விமான நிலையத்தில் இண்டிகோ விமானம் மீது மின்னல் தாக்கியதால் பரபரப்பு
விடியோக்கள்
தமிழ்நாடு அரசுக்கு திமுக உறுதுணையாக இருக்கும்! - Udhayanidhi Stalin | TN Assembly | Mekedatu

பேரவையில் முதல்வர் விஜய்யின் முதல் தீர்மானம்! | Vijay speech | TN assembly

என்னைத் தெரியும் எனச் சொன்னால்! GET OUT சொல்லிடுங்க! அமைச்சர் ராஜ்மோகன் | TVK



