10-ம் தேதி காங்கிரஸ் செயற்குழு கூட்டம்:  காங்கிரஸ் அறிவிப்பு

வரும் 10 ஆம் தேதி தில்லியில் காங்கிரஸ் செயற்குழு கூட்டம் நடைபெறுகிறது என காங்கிரஸ் தலைமை அறிவித்துள்ளது. 
10-ம் தேதி காங்கிரஸ் செயற்குழு கூட்டம்:  காங்கிரஸ் அறிவிப்பு

புதுதில்லி: வரும் 10 ஆம் தேதி தில்லியில் காங்கிரஸ் செயற்குழு கூட்டம் நடைபெறுகிறது என காங்கிரஸ் தலைமை அறிவித்துள்ளது. 

நாடாளுமன்றத்தின் குளிர்கால கூட்டத்தொடர் நவம்பர் 18-ஆம் தேதி தொடங்கி, டிசம்பர் 13-ஆம் தேதி முடிவடையவுள்ளதாக மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவித்தன. 

இதுதொடர்பாக நாடாளுமன்றத்தின் இருஅவை செயலர்களுக்கும் நாடாளுமன்ற விவகாரங்கள் துறை அமைச்சகம்  அறிக்கை அனுப்பியுள்ளது.

நாடாளுமன்றத்தின் குளிர்கால கூட்டத்தொடரில், இரு முக்கிய அவசர சட்டங்களுக்கு ஒப்புதல் வழங்குவது உள்பட பல்வேறு மசோதாக்கள் விவாதிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

பொருளாதார மந்த நிலையை சரிசெய்வதற்காக, கடந்த 1961-ஆம் ஆண்டு கொண்டு வரப்பட்ட வருமான வரி சட்டத்தில் திருத்தம் செய்து  மத்திய அரசு கடந்த மாதம்  அவசர சட்டம் இயற்றியது. அதன்படி, பெருநிறுவனங்களுக்கான வரி குறைக்கப்பட்டது. மேலும், அதே மாதத்தில் இ-சிகரெட்டுகள் உள்ளிட்டவை விற்பனை மற்றும் சேமிப்புக்கு தடை விதித்து அவசர சட்டம் கொண்டு வரப்பட்டது. இந்த இரு அவசர சட்டங்களுக்கும் குளிர்கால கூட்டத்தொடரில் ஒப்புதல் வழங்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

கடந்த இரு ஆண்டுகளாக நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் நவம்பர் 21-ஆம் தேதி தொடங்கி ஜனவரி முதல் வாரம் வரை நடைபெற்ற நிலையில், இந்த முறை டிசம்பர் மாதம் பாதியிலேயே கூட்டத்தொடர் முடிவடையவிருப்பது குறிப்பிடத்தக்கது.

இதனிடையே, இந்திய அரசமைப்புச் சட்டம் ஏற்றுக் கொள்ளப்பட்டு 70 ஆண்டுகள் நிறைவடைந்ததை கொண்டாடும் வகையில், நாடாளுமன்ற இரு அவைகளின் கூட்டு கூட்டம் வரும் 26-ஆம் தேதி காலை நடைபெறவுள்ளது. இந்தக் கூட்டத்தில் குடியரசுத் தலைவா் ராம்நாத் கோவிந்த் மற்றும் பிரதமா் நரேந்திர மோடி ஆகியோர் உரையாற்றவுள்ளனா்.

இந்நிலையில், குளிர்கால கூட்டத்தொடரில் பொருளாதார மந்தநிலை, பிராந்திய விரிவான பொருளாதார கூட்டு ஒப்பந்தம், வேளாண் பொருட்களுக்கு குறைவான விலை, வேலை வாய்ப்பின்மை போன்ற விவகாரங்களை எழுப்பி பொது போராட்டத்தில் ஈடுபடுவது என எதிர்க்கட்சிகள் முடிவு செய்துள்ளன.

இதுகுறித்து வரும் 10 ஆம் தேதி தில்லியில் நடைபெறும் காங்கிரஸ் செயற்குழு கூட்டத்தில் குளிர்கால கூட்ட தொடர், பிரியங்கா வாட்ஸ்அப் செயலி வழியே உளவு வேலையில் ஈடுபட்ட விவகாரம் உள்ளிட்டவற்றில் அடுத்த கட்ட நடவடிக்கைகள் பற்றி ஆலோசனை மேற்கொள்ளப்படும் என கூறப்படுகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com