சென்னை: வரும் 24 ஆம் தேதி அதிமுக செயற்குழு, பொதுக்குழு கூட்டம் நடைபெறும் என அறவிக்கப்பட்டுள்ளது. சசிகலா நீக்கத்திற்கு பிறகு நடைபெறும் முதல் பொதுக்குழு கூட்டம் என்பதால் முக்கியத்துவம் வாய்ந்த கூட்டமாக இந்த பொதுக்குழு பார்க்கப்படுகிறது.
இதுதொடர்பாக அதிமுக தலைமை வெளியிட்டுள்ள அறிவிப்பில், வரும் 24 ஆம் தேதி அதிமுக செயற்குழு, பொதுக்குழு கூட்டம் சென்னை வானகரத்தில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் அவைத் தலைவர் மதுசூதனன் தலைமையில் காலை 10.30 மணிக்கு கூட்டம் தொடங்கி நடைபெறுகிறது என அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி கூட்டாக அறிவித்துள்ளனர்.
இதற்கு முன்பு நடந்த கூட்டத்தில்தான் அதிமுக ஒருப்பிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவிகள் ஏற்படுத்கப்பட்டன. அதிமுகவில் பொதுச்செயலாளர் என்ற பதவி இனி கிடையாது என்றும் முந்தைய கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டிருந்தது.
இந்த கூட்டத்திற்கு செயற்குழு, பொதுக்குழுவின் அனைத்து உறுப்பினர்களுக்கும் அழைப்பிதழ் அனுப்பப்படும். அனைவரும் தங்களது அழைப்பிதழுடன் கலந்துகொள்ள வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
சசிகலா நீக்கத்திற்கு பிறகு நடைபெறும் முதல் பொதுக்குழு கூட்டம் என்பதால் இந்த செயற்குழு, பொதுக்குழு கூட்டம் முக்கியத்துவம் வாய்ந்த கூட்டமாக பார்க்கப்படுகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

குவாலிஃபையர் 1: ரஜத் படிதார் அதிரடி; குஜராத் டைட்டன்ஸுக்கு இமாலய இலக்கு!

இன்றைய செய்திகள் மே 26 - நேரலை!

மோகன்லாலின் திரிஷ்யம் - 3 படத்தின் மேக்கிங் விடியோ!

தமிழகத்தில் 10 இடங்களில் சதமடித்த வெய்யில்!
விடியோக்கள்

சன்ரைசர்ஸ் vs ராஜஸ்தான்: எலிமினேட்டரில் களம் யாருக்குச் சாதகம்? | SRH vs RR | Klaasen |

தொண்டர்களுக்கு திருமா வைத்த வேண்டுகோள்! | VCK | DMK | TVK

5 ஆவது முறையாக உயர்ந்த Petrol விலை! புலம்பும் மக்கள்! | Oil | People's View | Petrol Price Hike



