ஹோர்முஸ் நீரிணையைக் கடக்க இந்திய கப்பல்களுக்கு அனுமதி! - ஈரான் தூதர் தகவல்! புதுச்சேரியில் என்.ஆர்.காங்கிரஸ், பாஜக தொகுதிப் பங்கீடு பத்திரிகையாளர்களுக்கு ஓய்வூதியம் உயர்வு: முதல்வர் ஸ்டாலின் உத்தரவு வேளச்சேரி - பரங்கிமலை பறக்கும் ரயில் சேவை அட்டவணை வெளியீடு கட்சியின் பெயரை அறிவித்தார் சசிகலா!எரிபொருள் தட்டுப்பாடு! எதிர்க்கட்சிகள் அமளியால் மக்களவை ஒத்திவைப்பு!அதிமுகவில் இணைந்தார் காளியம்மாள்! எரிபொருள் தட்டுப்பாடு! 17 கோடி பீப்பாய் கச்சா எண்ணெய் விடுவித்தது அமெரிக்கா!
/

புதுக்கோட்டை மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் மர்ம காய்ச்சலுக்கு 60 பேர் அனுமதி

மர்ம காய்ச்சலுக்கு 60 பேர் புதுக்கோட்டை மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். 

News image
Updated On :3 அக்டோபர் 2019, 5:02 am

DIN


புதுக்கோட்டை: மர்ம காய்ச்சலுக்கு 60 பேர் புதுக்கோட்டை மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். 

மாவட்டம் முழுவதும் டெங்கு கொசுக்களை ஒழிக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. டெங்கு காய்ச்சலை உண்டாக்கும் ஏடிஸ் கொசுக்கள் நல்ல தண்ணீரில் உற்பத்தியாகக் கூடியவை. 3 வாரங்கள் மட்டுமே உயிர்வாழும் இந்தக் கொசுக்கள் நூற்றுக்கணக்கான முட்டைகளை இட்டு இனப்பெருக்கம் செய்கிறது.  இந்தக் கொசுக்கள் பகலில் கடிக்கும். டயா், பயன்படுத்தாத உடைந்த சிமென்ட் தொட்டிகள், நீண்ட காலமாக கழுவப்படாத தொட்டிகள் போன்றவற்றில் தேங்கும் இக்கொசுக்கள் முட்டை வைக்கின்றன.

சோர்வு, தலைவலி, உடல்வலி, வாந்தி, எலும்பு வலி ஆகியவை டெங்கு காய்ச்சலின் முக்கிய அறிகுறிகளாகும். ரத்தம் உறைவதற்கு முக்கிய காரணியாக விளங்கும் ரத்தத் தட்டணுக்களை டெங்கு வைரஸ் அழித்து விடும் தன்மை கொண்டது.

ரத்தத் தட்டணுக்கள் எண்ணிக்கை குறையும்போது, அது நுரையீரல், வயிறு போன்ற உறுப்புகளிலும், ஈறு, சிறுநீா் பாதையிலும் ரத்தக் கசிவை ஏற்படுத்தக் கூடும். உரிய மருத்துவ சிகிச்சை பெறவில்லை என்றால் உயிர் இழப்பு நேரிடலாம். சாதாரணமாக ஏற்படும் சளி, காய்ச்சல் தானாக ஓரிரு நாட்களில் குணமாகிவிடும். ஆனால் மலேரியா, எலிக் காய்ச்சல், டெங்கு, டைஃபாய்டு காய்ச்சல் மற்றும் டெங்கு ஆகியவற்றுக்கு உரிய மருத்துவ சிகிச்சை பெற வேண்டும்.  மருத்துவரின் ஆலோசனைப்படி ரத்தப் பரிசோதனை செய்ய வேண்டும். டெங்குக் காய்ச்சலைக் குணப்படுத்தவும், தடுக்கவும் நிலவேம்புக் குடிநீா் மற்றும் பப்பாளி இலைச்சாறு ஆகிய சித்த மருந்துகளைப் பயன்படுத்தலாம். காய்ச்சல் பாதிப்புகளில் இருந்து தங்களைப் பாதுகாத்துக் கொள்ளும் வகையில் பொதுமக்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என மாவட்ட நிர்வாக கேட்டுக்கொண்டிருந்தது. 

இந்நிலையில், டெங்கு காய்ச்சல் அறிகுறியுடன் 4 பேரும், மர்ம காய்ச்சலுக்கு 60 பேரும் புதுக்கோட்டை மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.