அரசுப் பள்ளிகளில் தனியார் தொண்டு நிறுவனங்களை அனுமதிக்கலாம்: பள்ளிக் கல்வித்துறை

அரசுப் பள்ளிகளில் தனியார் தொண்டு நிறுவனங்களை அனுமதிக்கலாம்: பள்ளிக் கல்வித்துறை

அரசுப் பள்ளிகளில் தனியார் தொண்டு நிறுவனங்களுக்கு அனுமதி அளித்து பள்ளிக் கல்வித்துறை சுற்றறிக்கை அனுப்பியுள்ளது. 


சென்னை: அரசுப் பள்ளிகளில் தனியார் தொண்டு நிறுவனங்களுக்கு அனுமதி அளித்து பள்ளிக் கல்வித்துறை சுற்றறிக்கை அனுப்பியுள்ளது. 

இதுதொடர்பாக பள்ளிக் கல்வித்துறை அனுப்பியுள்ள சுற்றறிக்கையில், அரசுப் பள்ளிகளில் விளையாட்டு, திறன் மேம்பாடு, கற்றலை மேம்படுத்தும் பணிகளில் தனியார் தொண்டு நிறுவனங்களுக்கு அனுமதி அளித்துள்ளது.

மேலும் அரசுப் பள்ளிகளில் தனியார் தொண்டு நிறுவனங்களுக்கு அனுமதி அளிப்பது குறித்து அந்தந்த பள்ளி முதல்வர்களே முடிவு செய்யலாம் என்றும் அனுமதி அளிக்கும் தகவலை மாவட்ட முதன்மை கல்வி அலுவலருக்கு தெரிவிக்க வேண்டும் என்றும் அறிவித்துள்ளது.

மேலும் பாட வேளை, தேர்வு காலம் ஆகியவை பாதிக்காத வகையில் தன்னார்வலர்களை அனுமதிக்க வேண்டும் என்றும் தொண்டு நிறுவனங்களின் செயல்பாடுகளை கண்காணிக்க வேண்டும் என்றும் பள்ளிக்கல்வித்துறை அறிவுறுத்தியுள்ளது.

தொண்டு நிறுவனங்களுக்கு அனுமதி அளிக்கும் விவகாரத்தில் தாமதம் செய்ய வேண்டாம் என்றும் அறிவுறுத்தப்பட்டட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com