கரோனா நிவாரண நிதிக்காக தனது ஒரு மாத ஊதியத்தை அளித்த நகராட்சி ஊழியர்
கரோனா நிவாரண நிதிக்காக தனது ஒரு மாத ஊதியத்தை அளித்த நகராட்சி ஊழியர் வழங்கினார்.


சாத்தூர்: கரோனா நிவாரண நிதிக்காக தனது ஒரு மாத ஊதியத்தை அளித்த நகராட்சி ஊழியர் வழங்கினார்.
உலகம் முழுவதும் கரோனா வைரஸ் தாக்கத்தால் பல்வேறு பாதிப்புகள் ஏற்பட்டுள்ளன இதற்காக தமிழக அரசு மற்றும் மத்திய அரசு நிவாரண நிதிக்காக தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் மற்றும் தனியார் நிறுவனங்கள் தொழிலதிபர்கள் அரசுக்கு நிவாரணம் அளித்து வரும் நிலையில், விருதுநகர் மாவட்டம் சாத்தூர் பகுதியில் அரசு ஊழியர்களுக்கு எடுத்துக்காட்டாக சாத்தூர் நத்தத்துப்பட்டி பகுதியைச் சேர்ந்த சண்முகபாண்டியன் என்பவர் சாத்தூர் நகராட்சியில் பிட்டராக பணிபுரிந்து வருகிறார். இவர் காரோன நிவாரணத் தொகையாக தனது ஒரு மாத ஊதியம் 33 ஆயிரத்தை சாத்தூர் நகராட்சி மூலம் முதல்வர் நிவாரண நிதிக்கு அனுப்பி வைத்துள்ளார்.
இதற்கான காசோலையை சாத்தூர் நகராட்சி ஆணையாளரிடம் சண்முகப்பாண்டியன் வழங்கினார்.
இவ்வாறு நகராட்சி ஊழியரின் இந்த செயலை பல்வேறு தரப்பினர் சமூக வலைதளங்களிலும் நேரிலும் பாராட்டி வருகின்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...