/

கரோனா பாதிப்பில் சீனாவை மிஞ்சியது ரஷ்யா

ராஷியாவில் ஒரே நாளில் 6, 411 பேருக்கு கரோனா நொய்த்தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதை அடுத்து சீனாவை மிஞ்சியது ரஷ்யா.

News image
Updated On :29 ஏப்ரல் 2020, 10:38 am

DIN


ராஷியாவில் ஒரே நாளில் 6, 411 பேருக்கு கரோனா நொய்த்தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதை அடுத்து சீனாவை மிஞ்சியது ரஷ்யா. அந்நாட்டில் கரோனா பாதிப்பு 99,399-ஐ கடந்துள்ளது. பலி 972-ஆக உயர்ந்துள்ளது.

கரோனா நோய்த்தொற்று உலக மக்களையே அச்சத்தில் ஆழ்த்தி வீட்டிலேயே முடக்கி வைத்துள்ளது. சீனாவின் நட்பு நாடான ரஷ்யாவில் தொற்று பாதிப்பு குறைந்து காணப்பட்டு வந்தது. 

இந்நிலையில், செவ்வாய்க்கிழமை ஒரே நாளில் 6, 411 பேருக்கு நோய்த்தொற்று உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து அங்கு தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 99 ஆயிரத்து 399 -ஆக உயர்ந்துள்ளது. மேலும் பலியானோர் எண்ணிக்கை 972 -ஆக உயர்ந்துள்ளது. தலைநகர் மாஸ்கோவில் தொற்று பாதிப்பு அதிகமாக உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.