ஈரான் போரை முடிவுக்குக் கொண்டு வருவது குறித்து பரிசீலனை: டிரம்ப்பிரதமர் மோடியின் புகைப்படங்களை ஏஐ மூலம் மோசமாகச் சித்திரித்த நபர் கைது!கேரள தேர்தல்: பாஜகவின் 3-ம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு!போர் அச்சுறுத்தல்! பேச்சுவார்த்தை ஒன்றே வழி: குடியரசுத் துணைத்தலைவர்தமிழ்நாட்டின் வளர்ச்சி முழுமையடைய திராவிட மாடல் ஆட்சி தொடர வேண்டும்! - முதல்வர்டி20 தொடருக்காக அயர்லாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் இந்திய அணி!ரஷியா மீது 280 டிரோன்களை ஏவி தாக்குதல் நடத்திய உக்ரைன்!ஈரான் மீதான தாக்குதல்களுக்கு கண்டனம் தெரிவிக்காத மோடி அரசு: காங்கிரஸ் குற்றச்சாட்டுவிஜய் வீட்டுக் கதவைத் தட்டினார் இபிஎஸ்: ஓ. பன்னீர்செல்வம்
/

வேதாரண்யம்: மின்கம்பி அறுந்து விழுந்து பூ பறிக்கச்சென்ற பெண் உயிரிழப்பு

நாகை மாவட்டம், வேதாரண்யம் அருகே மல்லிகைப் பூ பறிக்கச் சென்ற போது மின்கம்பி அறுந்து விழுந்து மின்சாரம் தாக்கிய பெண் காலை உயிரிழந்தார்.

News image
Updated On :1 ஆகஸ்ட் 2020, 7:24 am

DIN


வேதாரண்யம்: நாகை மாவட்டம், வேதாரண்யம் அருகே மல்லிகைப் பூ பறிக்கச் சென்ற போது மின்கம்பி அறுந்து விழுந்து மின்சாரம் தாக்கிய பெண் உயிரிழந்தார்.

ஆயக்காரன் புலம் -3 , காமராஜர் நகர் பகுதியைச் சேர்ந்தவர் நடராஜன். இவரது மனைவி புஷ்பவள்ளி (40). கூலித் தொழிலாளியான இவர், பக்கத்து கிராமமான கருப்பம்புலம் மேலக்காடு, சுப்பிரமணியன் என்பவர் வீட்டுத் தோட்டத்தில் மல்லிகைப் பூ பறிப்பதற்காக சனிக்கிழமை காலை வீட்டில் இருந்து புறப்பட்டுச் சென்றுக் கொண்டிருந்தார்.

அப்போது, அந்த பகுதியில் செல்லும் மின் கம்பி அறுந்து புஷ்பவள்ளியின் தலையில் விழுந்ததில் மின்சாரம் தாக்கியது.

இதையடுத்து, கரும்பம்புலம் அரசு மருத்துவமனைக்கு கொண்டுச் செல்லப்பட்டு, அங்கிருந்து வேதாரண்யம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். அவரை பரிசோதித்த மருத்துவர்கள் ஏற்கனவே இறந்து விட்டதை உறுதிப்படுத்தினர்.

இது குறித்து வாய்மேடு காவலர்கள் விசாரித்து வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.