தில்லி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த சோனியா காந்தி டிஸ்சார்ஜ்
தில்லி தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த காங்கிரஸ் இடைக்காலத் தலைவர் சோனியா காந்தி இன்று டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார்.


தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த காங்கிரஸ் இடைக்காலத் தலைவர் சோனியா காந்தி இன்று டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார்.
வழக்கமான உடல் பரிசோதனைகளுக்காக தில்லியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சோனியா காந்தி அனுமதிக்கப்பட்டார். கடந்த வெள்ளிக்கிழமை அனுமதிக்கப்பட்ட அவருக்கு மருத்துவர்கள் தொடர் பரிசோதனைகளை மேற்கொண்டனர். இதனை அடுத்து இன்று அவர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார்.
மேலும், சோனியா காந்தியின் உடல் நிலை சீராக உள்ளதாக தனியார் மருத்துவமனையின் தலைவர் டி.எஸ்.ராணா தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக மருத்துவமனை நிர்வாகம் சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், கடந்த மாதம் 30-ஆம் தேதி இரவு 7 மணிக்கு காங்கிரஸ் இடைக்காலத் தலைவர் சோனியா காந்தி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு பரிசோதனைகள் முடிந்த பிறகு உடல்நிலை சீரானதும் இன்று பிற்பகல் 1 மணிக்கு டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...