ராமர்கோயில் பூமிபூஜையை காண்பது அதிருஷ்டம்: பாபா ராம்தேவ்

ராமர்கோயில் பூமிபூஜையை காண்பது இந்தியாவின் மிகப்பெரிய அதிருஷ்டம் என்று பாபா ராம் தேவ் தெரிவித்துள்ளார்.
ராமர்கோயில் பூமிபூஜையை காண்பது அதிருஷ்டம்: பாபா ராம்தேவ்
ராமர்கோயில் பூமிபூஜையை காண்பது அதிருஷ்டம்: பாபா ராம்தேவ்

அயோத்தி: ராமர்கோயில் பூமிபூஜையை காண்பது இந்தியாவின் மிகப்பெரிய அதிருஷ்டம் என்று பாபா ராம் தேவ் தெரிவித்துள்ளார்.

அயோத்தியில் நடைபெற்று வரும் ராமர் கோயில் பூமிபூஜையில் பதஞ்சலி நிறுவனர் பாபா ராம்தேவ், சுவாமி அவதேஷானந்த் கிரி ஜி மகாராஜ் ஆகியோர் வருகை புரிந்தனர்.

அப்போது பாபா ராம்தேவ் பேசியதாவது, ராமர் கோயில் பூமிபூஜையை நடத்துவதும், அதனை காண்பதும் இந்தியாவிற்கும் அதன் மக்களுக்கும் கிடைத்த மிகப்பெரிய அதிருஷ்டம். தேசம் முழுக்க ராம ராஜியத்தை உருவாக்க வேண்டும். பதஞ்சலி சார்பில் அயோத்தியில் குருகுலம் அமைக்கப்படும்.  உலகம் முழுக்க உள்ள மக்களுக்கு வேதம், ஆயுர்வேதம் கற்பிக்கும் பணி அதில் தொடர்ந்து நடத்தப்படும் என்று கூறினார்.

இதனை அடுத்து சுவாமி அவதேஷானந்த் கிரி ஜி மகாராஜ் பேசியதாவது, ராமர்கோயில் பூமி பூஜையால், உலக நாடுகளின் கண்கள் இந்தியாவின் மீது உள்ளது.  மதநல்லிணக்கத்தை பறைசாற்றும் வரலாற்று சிறப்பு மிக்க நாள் இது என்று தெரிவித்தார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com