/

நியூ சவுத் வேல்ஸின் எல்லையை மூடியது குயின்ஸ்லாந்து 

கரோனா தொற்று அதிகரித்து வருவதால்  நியூ சவுத் வேல்ஸ் எல்லையை மூடுவதாக குயின்ஸ்லாந்து அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

News image

நியூ சவுத் வேல்ஸின் எல்லையை மூடியது குயின்ஸ்லாந்து 

Updated On :5 ஆகஸ்ட் 2020, 8:13 am

கான்பெர்ரா, ஆக.5: கரோனா தொற்று அதிகரித்து வருவதால்  நியூ சவுத் வேல்ஸ் எல்லையை மூடுவதாக குயின்ஸ்லாந்து அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இது குறித்து குயின்ஸ்லாந்து அதிகாரி ஒருவர் கூறுகையில்,

மெல்போர்னில் திடீரென கரோனாவின் இரண்டாம் அலை ஏற்பட்டு தொற்றின் வேகம் அதிகரித்ததால் விக்டோரியாவுடனான தனது எல்லையை ஏற்கனவே மூடியது குயின்ஸ்லாந்து.

தற்போது நியூ சவுத் வேல்ஸ் நகரில் கரோனா தொற்று அதிகரித்து வருவதால் அந்த நகரின் எல்லை மூடப்படுகிறது.

மேலும், விக்டோரியாவில் நான்கு வாரங்களாக பொது முடக்கம் அமலில் இருந்தும் இன்று (புதன்கிழமை) புதிதாக 725 பேருக்கு தொற்று ஏற்பட்டுள்ளது.

ஆஸ்திரேலியாவின் மிகப் பெரிய நகரமான சிட்னியில் வாரத்திற்கு சராசரியாக 80 பேருக்கு தொற்று கண்டறியப்பட்டு வருகின்றது. இது சமூக பரவலாக மாற வாய்ப்புண்டு என்பதால் கவலை அளிக்கிறது என தெரிவித்தார்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.