புதுதில்லியில் 12 வயது சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை
புதுதில்லியின் புறநகரான பாசிம் விஹார் மேற்கு பகுதியில் 12 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்து கொடூரமாக தாக்கியுள்ளனர். பலத்த காயமடைந்த சிறுமி எய்ம்ஸ் மருத்துவமனையில் உயிருக்கு போராடி வருகிறார்.


புதுதில்லியின் புறநகரான பாசிம் விஹார் மேற்கு பகுதியில் 12 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்து கொடூரமாக தாக்கியுள்ளனர். பலத்த காயமடைந்த சிறுமி எய்ம்ஸ் மருத்துவமனையில் உயிருக்கு போராடி வருகிறார்.
இது குறித்து காவல் துறை அதிகாரி கூறுகையில்,
சிறுமி தனது வீட்டில் செவ்வாய்க்கிழமை தனியாக இருந்துள்ளார். அப்போது அடையாளம் தெரியாத நபர்கள் பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர். மேலும், சிறுமியின் தலை மற்றும் பின் புறங்களில் கூர்மையான ஆயுதம் கொண்டு தாக்கியுள்ளனர்.
படுகாயமடைந்த சிறுமிக்கு அருகிலுள்ள மருத்துவமனையில் முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. பின்னர் மருத்துவர் பரிந்துரையில் அவரை எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். தற்போது உயிருக்கு ஆபத்தான நிலையில் உள்ளதாக எய்ம்ஸ் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
மேலும், குற்றத்திற்கு தொடர்புடைய நபர்களின் மீது போக்சோ மற்றும் கொலை முயற்சி சட்டங்களின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. தனிப்படைகள் அமைத்து குற்றவாளிகளை தேடி வருகிறோம் என தெரிவித்தார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...