மேற்கு வங்கத்தில் 2-ஆவது கட்ட தோ்தல் அமைதியாக நடந்தது: தோ்தல் ஆணையம் திட்டமிட்டபடி மே 3-ஆம் வாரத்தில் 12-ஆம் வகுப்பு தோ்வு முடிவு: சிபிஎஸ்இ வெறுப்புப் பேச்சுகளுக்கு எதிரான மனுக்கள்: உச்சநீதிமன்றம் தள்ளுபடி மேற்காசிய போரால் பணவீக்கம் அதிகரிக்கும் அபாயம்: நிதியமைச்சகம் அறிக்கை எத்தனால் கலப்பு விரிவாக்கம்: வாகன விதிமுறைகளில் மத்திய அரசு திருத்தம் கேரளம்: மாநிலம் முழுவதும் அறிவிக்கப்படாத தொடா் மின் வெட்டு; பல இடங்களில் வெடித்த போராட்டம்
/

கேரள நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தோருக்கு இரங்கல்: உள்துறை அமைச்சர் அமித் ஷா

கேரளத்தில் நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தோரின் குடும்பத்தினருக்கு உள்துறை அமைச்சர் அமித் ஷா இரங்கல் தெரிவித்துள்ளார்.

News image

கேரள நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தோருக்கு இரங்கல்: உள்துறை அமைச்சர் அமித் ஷா

Updated On :7 ஆகஸ்ட் 2020, 12:20 pm

டெல்லி: கேரளத்தில் நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தோரின் குடும்பத்தினருக்கு உள்துறை அமைச்சர் அமித் ஷா இரங்கல் தெரிவித்துள்ளார்.

கேரளத்தில் தென்மேற்கு பருவமழை காரணமாக பெய்த தொடர் கனமழையால் இடுக்கி மாவட்டம் ராஜமாலா பகுதியில் திடீர் நிலச்சரிவு ஏற்பட்டது. இதில் அப்பகுதி பணியாளர் முகாமில் தங்கியிருந்த 80-க்கும் அதிகமான தொழிலாளர்கள் மண்சரிவில் சிக்கிக்கொண்டதாக கூறப்படுகிறது. நிலச்சரிவில் சிக்கி இதுவரை 13 பேர் உயிரிழந்த நிலையில் 10 பேர் உயிருடன் மீட்கப்பட்டனர்.

உயிரிழந்தோரின் குடும்பத்திற்கு பிரதமர் மோடி ரூ.2 லட்சம் நிவாரணம் வழங்கப்படும் என அறிவித்துள்ளார். படுகாயம் அடைந்தவர்களுக்கு ரூ.50,000 வழங்கப்படும் என தெரிவித்துள்ளார். 

இதனிடையே நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தோரின் குடும்பத்திற்கு மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா இரங்கல் தெரிவித்துள்ளார். நிலச்சரிவு ஏற்பட்டுள்ள பகுதிகளில் மீட்பு பணிகளை விரைந்து மேற்கொள்ள வேண்டும் என தேசிய பேரிடர் மீட்பு படையிடம் கேட்டுக்கொண்டுள்ளார். மேலும் நிலச்சரிவில் சிக்கி படுகாயம் அடைந்தவர்கள் விரைவில் குணமடைய இறைவனை வேண்டிக்கொள்வதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.