கேரளத்தில் நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தோரின் குடும்பத்திற்கு தலா ரூ.2 லட்சம் நிவாரணம் வழங்கப்படும் என பிரதமர் நரேந்திர மோடி அறிவித்துள்ளார்.
கேரளத்தில் தென்மேற்கு பருவமழையையொட்டி கடந்த சில தினங்களாக தொடர் கனமழை பெய்து வருகிறது. இடுக்கி, கோழிக்கூடு ஆகிய மாவட்டங்களில் பெய்து வரும் தொடர் கனமழையால் பல்வேறு பகுதிகளில் வெள்ளம் பெருக்கெடுத்துள்ளது.
தொடர் மழையால் இடுக்கி ராஜமாலா பகுதியில் ஏற்பட்ட நிலச்சரிவு ஏற்பட்டது. இதில் அப்பகுதியில் உள்ள தொழிலாளர் முகாமில் தங்கியிருந்த 80-க்கும் அதிகமான தொழிலாளர்கள் சிக்கினர். இதில் 10 பேர் உயிருடன் மீட்கப்பட்ட நிலையில், இதுவரை 15 பேர் உயிரிழந்துள்ளதாக அம்மாநில அரசு தெரிவித்துள்ளது.
இதனிடையே நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தோரின் குடும்பத்திற்கு தலா ரூ.2 லட்சம் வழங்கப்படும் என பிரதமர் நரேந்திர மோடி அறிவித்துள்ளார். மேலும் படுகாயம் அடைந்தவர்களுக்கு ரூ.50,000 வழங்கப்படும் எனவும் தெரிவித்துள்ளார்.
நிலச்சரிவு ஏற்பட்ட பகுதிகளில் நடமாடும் மருத்துவக் குழுவினர் அனுப்பிவைக்கப்பட்டு நிலச்சரிவில் இருந்து மீட்கப்பட்டவர்களுக்கு தொடர் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

பொதுத் துறை வங்கியில் பாதுகாப்பு மேலாளர் பணி: விண்ணப்பிப்பது எப்படி?

பவர்கிரிட் நிறுவனத்தில் ஏராளமான வேலைவாய்ப்புகள்: டிப்ளமோ முடித்தவர்களுக்கு வாய்ப்பு!

இன்றைய ராசி பலன்கள் (30 ஏப்ரல் 2026) 12 ராசிகளுக்கும்! மீன ராசிக்கு பணவரவு!

கௌரவம் உயரும் இந்த ராசிக்கு! தினப்பலன்கள்!
வீடியோக்கள்
குடிநீர் குழாய் வேண்டாம்!! ஊற்றுத்தண்ணீரை விரும்பும் கிராம மக்கள்! | Pudukottai
இணையதளச் செய்திப் பிரிவு

த்ரிஷ்யம் 3 டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

எல்லா டீமும் ஏன் தப்பு தப்பா விளையாடுறாங்க..?
தினமணி செய்திச் சேவை

பில்லா ரீ-ரிலீஸ் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு

