விளாதிகுளத்தில் 12 ஆம் வகுப்பு மாணவி பாலியல் வன்கொடுமை செய்து கொலைதிமுக கூட்டணியில் மதிமுகவுக்கு 4 தொகுதிகள் ஒதுக்கீடு!திமுக ஆட்சியில் பெண்கள் அச்சத்துடன் வாழ வேண்டிய சூழல் : பிரதமர் மோடிமத்திய அரசின் திட்டங்களை செயல்படுத்தாமல் தாமதப்படுத்துகிறது திமுக : பிரதமர் மோடி கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு: மக்கள் அச்சம் கொள்ள வேண்டாம் - பிரதமர் மோடி 4 கோடி மரங்களை நடுவதற்கு இணையாக இயற்கை எரிவாயுத் திட்டம் இருக்கும் : பிரதமர் மோடிதமிழ்நாட்டிற்கு புதிதாக 5 ரயில் சேவைகளை பிரதமர் நரேந்திர மோடி தொடக்கி வைத்தார் லெபனான் மீதான இஸ்ரேலின் தாக்குதலில் 570 பேர் கொலை! எல்பிஜி தட்டுப்பாடு: ரயில்களில் உணவு வழங்குவதில் சிக்கல்?கேஸ் தட்டுப்பாடு, தமிழர்களுக்கு சிறப்பு விமானம்... பிரதமருக்கு முதல்வர் கடிதம்!
/

கர்நாடகத்தில் 13 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு

கர்நாடகத்தில் 13 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக கர்நாடக இயற்கை பேரழிவு கண்காணிப்பு மையம் எச்சரித்துள்ளது.

News image
கர்நாடகத்தில் 13 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது
Updated On :10 ஆகஸ்ட் 2020, 12:16 pm

DIN

பெங்களூரு: கர்நாடகத்தில் 13 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக கர்நாடக இயற்கை பேரழிவு கண்காணிப்பு மையம் (கே.எஸ்.என்.டி.எம்.சி) எச்சரித்துள்ளது.

இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, கடலோர கர்நாடக பகுதிகளில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது. தட்சிண கன்னடம், உடுப்பி, உத்தர கன்னடம், பாகல்கோட், பைதர், கலாபுராகி, ராய்ச்சூர் ஆகிய வடக்கு பகுதிகளில் மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. மேலும், சிக்மங்களூர், ஹாசன், குடகு, சிவமோகா ஆகிய தெற்கு பகுதிகளிலும் மழை பெய்யும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

கர்நாடகத்தில் கடந்த 24 மணிநேரத்தில் அதிகபட்சமாக உடுப்பி மாவட்டத்தில் 284 மி.மீ மழை பதிவாகியுள்ளது. உத்தர கன்னடா, தட்சிண கன்னடா பகுதிகளில்  115 முதல் 204 மி.மீ மழை பதிவாகியுள்ளது.

கர்நாடகத்தின் பல்வேறு பகுதிகளில் நாளை (செவ்வாய்க் கிழமை) அதிக மழைக்கு வாய்ப்புள்ளதாகவும், அதற்கு அடுத்த நாள் முதல் (புதன்கிழமை) படிப்படியாக மழை குறைய வாய்ப்புள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.