திருவனந்தபுரம்: கேரளத்தில் வெள்ள பாதிப்பு பணிகளை மேற்கொள்வதற்காக தகுந்த நேரத்தில் தேசிய பேரிடர் மீட்பு படை குழுவினரை அனுப்பியதற்காக பிரதமர் நரேந்திர மோடிக்கு முதல்வர் பினராயி விஜயன் நன்றி தெரிவித்துள்ளார்.
கேரளத்தில் பெய்து வரும் தொடர் மழை காரணமாக ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. நீர்பிடிப்பு பகுதிகளில் பெய்த கனமழையால் அணைகள் திறந்துவிடப்பட்டுள்ளன. இதனால் பல்வேறு இடங்களில் வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதனால் கேரளத்தில் வெள்ள பாதிப்பு மீட்பு பணிகளை மேற்கொள்வதற்காக தேசிய பேரிடர் மீட்பு படை குழுவினர் அனுப்பிவைக்கப்பட்டனர். இதற்காக பிரதமர் மோடிக்கு முதல்வர் பினராயி விஜயன் நன்றி தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் பேசியதாவது, வெள்ள பாதிப்பு மீட்பு பணிகளை மேற்கொள்ள தகுந்த நேரத்தில் தேசிய பேரிடர் மீட்பு படை குழுவினர் மத்திய அரசால் அனுப்பிவைக்கப்பட்டனர். இதற்காக பிரதமர் மோடிக்கு நன்றி தெரிவித்துக்கொள்கிறேன். மேலும் ராஜமலை பகுதியில் ஏற்பட்ட நிலச்சரிவிலும், கோழிக்கோடு விமான விபத்திலும் தீவிரமாக செயல்பட்ட தேசிய பேரிடர் மீட்பு படை குழுவினருக்கும் நன்றி தெரிவித்துக்கொள்கிறேன். கேரளத்தில் ஏற்பட்ட வெள்ள பாதிப்புகள் குறித்து மத்திய அரசுக்கு விரைவில் அறிக்கை அளிக்கப்படும் இவ்வாறு அவர் தெரிவித்தார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

பொதுத் துறை வங்கியில் பாதுகாப்பு மேலாளர் பணி: விண்ணப்பிப்பது எப்படி?

பவர்கிரிட் நிறுவனத்தில் ஏராளமான வேலைவாய்ப்புகள்: டிப்ளமோ முடித்தவர்களுக்கு வாய்ப்பு!

இன்றைய ராசி பலன்கள் (30 ஏப்ரல் 2026) 12 ராசிகளுக்கும்! மீன ராசிக்கு பணவரவு!

கௌரவம் உயரும் இந்த ராசிக்கு! தினப்பலன்கள்!
வீடியோக்கள்
குடிநீர் குழாய் வேண்டாம்!! ஊற்றுத்தண்ணீரை விரும்பும் கிராம மக்கள்! | Pudukottai
இணையதளச் செய்திப் பிரிவு

த்ரிஷ்யம் 3 டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

எல்லா டீமும் ஏன் தப்பு தப்பா விளையாடுறாங்க..?
தினமணி செய்திச் சேவை

பில்லா ரீ-ரிலீஸ் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு


