காங். ஆட்சியை கவிழ்க்க நினைக்கும் பாஜகவின் முயற்சி தோல்வி: அசோக் கெலாட்
ராஜஸ்தானில் காங்கிரஸ் ஆட்சியை கவிழ்க்க நினைக்கும் பாஜகவின் முயற்சி தோல்வி அடைந்துள்ளதாக முதல்வர் அசோக் கெலாட் தெரிவித்துள்ளார்.
ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட்
ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட்
ஜெய்ப்பூர்: ராஜஸ்தானில் காங்கிரஸ் ஆட்சியை கவிழ்க்க நினைக்கும் பாஜகவின் முயற்சி தோல்வி அடைந்துள்ளதாக முதல்வர் அசோக் கெலாட் தெரிவித்துள்ளார். மேலும் காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர்கள் ஒத்துமையாக உள்ளதாகவும் அவர் கூறினார்.
ராஜஸ்தானில் அதிருப்தியில் இருந்த முன்னாள் துணை முதல்வர் சச்சின் பைலட் நேற்று (திங்கட் கிழமை) காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி மற்றும் பொதுச்செயலர் பிரியங்கா காந்தியை சந்தித்து பேசினார்.
இந்த சந்திப்பில் சச்சின் பைலட் மீண்டும் காங்கிரஸ் கட்சியில் இணைவது குறித்து விவாதித்ததாக கூறப்படுகிறது. மேலும் சச்சின் பைலட் மற்றும் அவரது ஆதரவு சட்டமன்ற உறுப்பினர்கள் எழுப்பிய விவகாரங்களுக்கு தீர்வு காணும் வகையில் 3 நபர்கள் அடங்கிய குழுக்கள் அமைக்கப்பட்டன.
இதனிடையே இது குறித்து ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட் பேசியதாவது, காங்கிரஸ் கட்சியில் அமைதி மற்றும் சகோதரத்துவம் நிலைத்துள்ளது. குறைகளை கண்டறிந்து களைவதற்காக 3 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது. ராஜஸ்தானில் ஆட்சியை கவிழ்க்க வேண்டும் என்ற பாஜகவின் திட்டம் தோல்வி அடைந்துள்ளது. காங்கிரஸ் கட்சியின் சட்டமன்ற உறுப்பினர்கள் ஒற்றுமையாக உள்ளோம். கட்சியில் இருந்து ஒரு உறுப்பினர் கூட இதுவரை விலகவில்லை என்று தெரிவித்தார்.
வருவாய்த்துறை மற்றும் தேசிய புலனாய்வுத்துறை ஆகியவை தவறாக பயன்படுத்தப்படுகிறது. மதத்தின் பெயரில் அரசியல் நடத்தப்பட்டு வருகிறது. எனினும் எங்கள் (காங்கிரஸ்) ஆட்சி 5 ஆண்டுகளை முழுமையாக நிறைவு செய்யும். அடுத்த தேர்தலிலும் காங்கிரஸ் கட்சியே ஆட்சியை பிடிக்கும் இவ்வாறு அசோக் கெலாட் கூறினார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...