குஜராத்தில் சிறுத்தை கடித்ததில் சிறுமி பலி
குஜராத்தின் தஹோத் மாவட்டத்தில் சங்கசர் கிராமத்திற்கு அருகே 7 வயது சிறுமியை, சிறுத்தை கொலை செய்துள்ளதாக வனத்துறை அதிகாரி செவ்வாய்க்கிழமை தெரிவித்தார்.


குஜராத்தின் தஹோத் மாவட்டத்தில் சங்கசர் கிராமத்திற்கு அருகே 7 வயது சிறுமியை, சிறுத்தை கொலை செய்துள்ளதாக வனத்துறை அதிகாரி செவ்வாய்க்கிழமை தெரிவித்தார்.
இது குறித்து வனத்துறை அதிகாரி கூறுகையில், சங்கசர் கிராமப் பகுதியில் கடந்த ஒரு மாதத்தில் மட்டும் மூன்று பேரை சிறுத்தை கொன்றுள்ளது. கடந்த திங்கள்கிழமை 7 வயது சிறுமியை, சிறுத்தை காட்டிற்குள் இழுத்துச் சென்றது.
இன்று காலை காட்டின் அடர்ந்த பகுதியில் சிறுத்தை கொண்டு செல்லப்பட்ட சிறுமியின் உடல் கிடந்தது என கூறினார்.
மேலும் இந்த பகுதியில் ஆகஸ்ட் 8-ம் தேதி ஒரு குழந்தையையும், ஜூலை 26-ம் தேதி ஆடு மேய்ப்பவரையும் சிறுத்தை கொன்றுள்ளது. இந்த காட்டிற்குள் 20 க்கும் மேற்ப்பட்ட சிறுத்தைகள் இருப்பதாகவும், கடந்த இரண்டு மாதத்தில் இது மாதிரியான சம்பவங்கள் அதிகளவில் பதிவாகியுள்ளதாகவும் தெரிவித்தார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...