ஈரான் - அமெரிக்கா இடையே 14 மணிநேரம் நீடித்த பேச்சுவார்த்தை நிறைவு! மு.க. ஸ்டாலின் ஐந்தாம் கட்ட பிரசாரம் திருவள்ளூரில் நாளை தொடக்கம்சட்டக் கட்டமைப்புகள் முழுவதிலும் சீா்திருத்தம்: உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி வலியுறுத்தல் இந்தியப் பங்குச் சந்தை 5 ஆண்டுகளில் இல்லாத ஏற்றம்!எனது வேட்பு மனுவை செல்லாததாக்க பாஜக முயன்றது: மம்தா
/

கொல்கத்தா : போலி அழைப்பு மையம் நடத்திய 9 பேர் கைது

கொல்கத்தாவில் போலி அழைப்பு மையம் நடத்தி பல கோடி ரூபாய் மோசடி செய்த 9 பேர் கைது செய்யப்பட்டனர்.

News image

கோப்புப்படம்

Updated On :12 ஆகஸ்ட் 2020, 7:59 am

கொல்கத்தாவில் போலி அழைப்பு மையம் நடத்தி பல கோடி ரூபாய் மோசடி செய்த 9 பேர் கைது செய்யப்பட்டனர்.

தெற்கு கொல்கத்தாவின் பிரகதி மைதானம் மற்றும் பிரதாபதித்யா சாலையில் உள்ள அழைபேசி மையங்களில் செவ்வாய்க்கிழமை இரவு காவல்துறை நடத்திய சோதனையில் மக்களை ஏமாற்றி பணமோசடி செய்யும் போலியான மையம் என தெரியவந்தது.

இதையடுத்து இரண்டு இடங்களிலும் 9 பேரை காவல்துறையினர் கைது செய்தனர். மேலும் சோதனையில் மெர்சிடிஸ் கார், ரூ. 4 லட்சம் பணம், மடிக்கணினிகள், மொபைல் போன்கள் மற்றும் பிற மின்னணு பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டது.

பிகாரின் பாட்னாவைச் சேர்ந்த ஒருவர் தன்னை போலி அழைப்பு மூலம் ஏமாற்றியதாக காவல்துறையில் அளித்த புகாரின் அடிப்படையில் இந்த சோதனை நடைபெற்றது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.