ஈரான் - அமெரிக்கா இடையே 14 மணிநேரம் நீடித்த பேச்சுவார்த்தை நிறைவு! மு.க. ஸ்டாலின் ஐந்தாம் கட்ட பிரசாரம் திருவள்ளூரில் நாளை தொடக்கம்சட்டக் கட்டமைப்புகள் முழுவதிலும் சீா்திருத்தம்: உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி வலியுறுத்தல் இந்தியப் பங்குச் சந்தை 5 ஆண்டுகளில் இல்லாத ஏற்றம்!எனது வேட்பு மனுவை செல்லாததாக்க பாஜக முயன்றது: மம்தா
/

அருணாசல பிரதேசத்தில் புதிதாக 96 பேருக்கு கரோனா

அருணாசல பிரதேசத்தில் இன்று புதிதாக 96 பேருக்கு கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. 

News image

கோப்புப்படம்

Updated On :12 ஆகஸ்ட் 2020, 6:07 am

அருணாசல பிரதேசத்தில் இன்று புதிதாக 96 பேருக்கு கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. 

இதுகுறித்து சுகாதாரத்துறை வெளியிட்ட அறிக்கையில்,

இன்று புதிதாக 96 பேருக்கு கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து மொத்த பாதிப்பு 2,327 ஆக உயர்ந்துள்ளது. 

பாதிக்கப்பட்டவர்களில் 86 பேருக்கு எந்த அறிகுறியும் இல்லை. 10 பேருக்கு மட்டுமே காய்ச்சல், சளி போன்ற அறிகுறிகள் இருந்தது.

இதுவரை கரோனா தொற்றில் இருந்து குணமடைந்தோர் மொத்த எண்ணிக்கை 1,634 ஆக உள்ளது. தற்போது மருத்துவமனையில் 690 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சைப் பலனின்றி இதுவரை 3 பேர் பலியாகியுள்ளனர் என தெரிவித்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.