விளாதிகுளத்தில் 12 ஆம் வகுப்பு மாணவி பாலியல் வன்கொடுமை செய்து கொலைதிமுக கூட்டணியில் மதிமுகவுக்கு 4 தொகுதிகள் ஒதுக்கீடு!திமுக ஆட்சியில் பெண்கள் அச்சத்துடன் வாழ வேண்டிய சூழல் : பிரதமர் மோடிமத்திய அரசின் திட்டங்களை செயல்படுத்தாமல் தாமதப்படுத்துகிறது திமுக : பிரதமர் மோடி கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு: மக்கள் அச்சம் கொள்ள வேண்டாம் - பிரதமர் மோடி 4 கோடி மரங்களை நடுவதற்கு இணையாக இயற்கை எரிவாயுத் திட்டம் இருக்கும் : பிரதமர் மோடிதமிழ்நாட்டிற்கு புதிதாக 5 ரயில் சேவைகளை பிரதமர் நரேந்திர மோடி தொடக்கி வைத்தார் லெபனான் மீதான இஸ்ரேலின் தாக்குதலில் 570 பேர் கொலை! எல்பிஜி தட்டுப்பாடு: ரயில்களில் உணவு வழங்குவதில் சிக்கல்?கேஸ் தட்டுப்பாடு, தமிழர்களுக்கு சிறப்பு விமானம்... பிரதமருக்கு முதல்வர் கடிதம்!
/

ஹிமாச்சலப் பிரதேசத்தில் வெள்ள பாதிப்பால் பாலம் சேதம்

ஹிமாச்சலப் பிரதேசத்தில் கின்னார் மாவட்டத்தில் பெய்த தொடர் மழை காரணமாக ஏற்பட்ட வெள்ளப்பெருக்கால் தற்காலிக பாலம் சேதம் அடைந்தது.

News image
கோப்புப்படம்
Updated On :12 ஆகஸ்ட் 2020, 5:52 am

DIN

ஹிமாச்சலப் பிரதேசத்தில் கின்னார் மாவட்டத்தில் பெய்த தொடர் மழை காரணமாக ஏற்பட்ட வெள்ளப்பெருக்கால் தற்காலிக பாலம் சேதம் அடைந்தது.

ஹிமாச்சலப் பிரதேசத்தில் கடந்த சில தினங்களாக தொடர் மழை பெய்து வருகிறது. தில்லி, உத்தரப் பிரதேசம், ஹிமாச்சலப் பிரதேசம் ஆகிய மாநிலங்களுக்கு இந்திய வானிலை ஆய்வு மையம் சார்பில் ஆரஞ்சு நிற எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது. 

இதனிடையே தொடர் மழையால் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு காரணமாக ஹிமாச்சலப் பிரதேசத்தின் கின்னார் மாவட்டத்தில் உள்ள ஸ்கிப்பா கிராமத்தில் அமைக்கப்பட்டிருந்த தற்காலிக பாலம் சேதம் அடைந்தது. தொடர் மழையால் கனரக வாகனங்கள் செல்வதற்கு தடை விதிக்கப்பட்டிருந்தது. எனினும் வெள்ளத்தால் பாலம் சேதம் அடைந்தது. பாலத்திற்கு அருகே உள்ள ஸ்கிப்பா கிராம சாலையும் வெள்ளத்தால் சேதம் அடைந்துள்ளது. இந்த நிகழ்வில் உயிரிழப்புகள் ஏதும் ஏற்படவில்லை என தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.