சமீர் ரிஸ்வி அதிரடியில் தில்லி கேபிடல்ஸ் வெற்றி!பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு இல்லை! 2 மாதங்களுக்குத் தேவையான கச்சா எண்ணெய் கையிருப்பு!பாஜகவுடன் திமுக கூட்டணி வைத்தது; இபிஎஸ் போல அடகு வைக்கவில்லை - மு.க. ஸ்டாலின்3 மாதங்களில் போதைப்பொருள்களை ஒழிப்போம் : எடப்பாடி பழனிசாமிபெட்ரோல், டீசல், எல்பிஜி விலையேற்றம் இல்லை: மத்திய அரசுஷெல் நிறுவன பெட்ரோல் ரூ. 7, டீசல் ரூ. 25 அதிரடி விலையேற்றம்!
/

ஆக.19 முதல் ஹைதராபாத்-ஒளரங்காபாத் தினசரி விமான சேவை

இண்டிகோ விமான சேவை தனது ஹைதராபாத்-ஒளரங்காபாத் விமானத்தை ஆகஸ்ட் 19 முதல் தினமும் இயக்க முடிவு செய்துள்ளதாக அறிவித்துள்ளது. 

News image

கோப்புப்படம்

Updated On :21 அக்டோபர் 2020, 5:49 am

PTI

இண்டிகோ விமான சேவை தனது ஹைதராபாத்-ஒளரங்காபாத் விமானத்தை ஆகஸ்ட் 19 முதல் தினமும் இயக்க முடிவு செய்துள்ளதாக அறிவித்துள்ளது. 

இதுகுறித்து நகர விமான நிலைய இயக்குநர் டி.ஜி.சால்வே கூறுகையில்,

மார்ச் மாத இறுதியில் கரோனா தொற்று காரணமாக உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு விமான சேவைகள் நிறுத்தப்பட்டது. மே மாத இறுதி முதல் படிப்படியாக சேவைகள் தொடங்கி வருகிறோம்.

ஜூன் 19 முதல் அவுரங்காபாத்தில் இருந்து புது தில்லிக்கு ஒரு இண்டிகோ விமானம் வாரத்திற்கு மூன்று முறை இயக்கி வருகின்றனர்.

மற்றொரு விமான நிறுவனம் கடந்த மாதம் மத்திய மகாராஷ்டிர நகரத்திலிருந்து ஹைதராபாத்திற்கு ஒரு விமானத்தைத் வாரத்திற்கு நான்கு முறை இயக்கி வருகின்றனர்.

ஏர் இந்தியா விமானமும் புது தில்லிக்கு வாரத்திற்கு இரண்டு முறை இயக்கி வருகின்றனர்.

இந்நிலையில் தற்போது இண்டிகோ நிறுவனம் ஆகஸ்ட் 19 முதல் தினசரி ஹைதராபாத்-ஒளரங்காபாத்-ஹைதராபாத் விமானத்தை இயக்குவதாக அறிவித்துள்ளனர் என கூறினார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.