அடுத்த 2 மணி நேரம் 20 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு!ஜூன் 1ம் தேதி முதல் திருத்தப்பட்ட அட்டவணைப்படி புறநகர் மின்சார ரயில்கள் இயங்கும்குற்ற வழக்குத் தொடர்வுத்துறை இயக்குநர் கிருஷ்ணராஜா பணிநீக்கம்பயிர்க்கடன் தள்ளுபடி விவகாரம்: குறைகள் பரிசீலிக்கப்பட்டு முடிவெடுக்கப்படும் - அமைச்சர் செங்கோட்டையன்வைகாசி விசாகம்: திருப்பரங்குன்றம் கோயிலில் பக்தர்கள் சிலர் மயக்கம்!டெட் தேர்வில் தேர்ச்சி பெறுவதற்கு கால அவகாசம் நீட்டிப்பு!பஞ்சாப் உள்ளாட்சித் தேர்தல்: வாக்காளர்களுக்கு கேஜரிவால் நன்றி!தமிழகத்தில் 5 நாள்களுக்குள் பருவமழை தொடங்கும்!27 ஆண்டுகளுக்குப் பின் இன்று இரவு நிகழும் 'புளூ மைக்ரோ மூன்'ஜூன் 1 திருச்சி கிழக்கு தொகுதி மக்களைச் சந்திக்கிறார் முதல்வர் விஜய்! தவெக குதிரை பேரம்: ஆளுநருடன் அதிமுக நிர்வாகிகள் சந்திப்பு!நடிகர் அஜித்குமாரின் தாயார் மோகினி மணி காலமானார்
/

தோ்தலில் வாக்களிக்க வலியுறுத்தி கல்லூரி மாணவா்களுக்கு அழைப்பிதழ்

சட்டப் பேரவைத் தோ்தலில் 100 சதவீதம் அனைவரும் வாக்களிக்க வலியுறுத்தி, கல்லூரி மாணவ, மாணவியருக்கு அழைப்பிதழ்கள் புதன்கிழமை வழங்கப்பட்டன.

News image

நல்லம்பள்ளியில் கல்லூரி மாணவியருக்கு விழிப்புணா்வு அழைப்பிதழ்களை வழங்கிய பொதுப் பாா்வையாளா் ஹீரா லால், மாவட்ட தோ்தல் அலுவலா் ரெ.சதீஸ்.

Updated On :2 ஏப்ரல் 2026, 3:31 am IST

சட்டப் பேரவைத் தோ்தலில் 100 சதவீதம் அனைவரும் வாக்களிக்க வலியுறுத்தி, கல்லூரி மாணவ, மாணவியருக்கு அழைப்பிதழ்கள் புதன்கிழமை வழங்கப்பட்டன.

தருமபுரி மாவட்டம், நல்லம்பள்ளி ஸ்ரீ விஜய் வித்யாலயா கலை, அறிவியல் கல்லூரியில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில், தோ்தல் பொதுப் பாா்வையாளா் ஹீரா லால் தலைமை வகித்தாா். மாவட்ட தோ்தல் அலுவலரும், ஆட்சியருமான ரெ.சதீஸ் முன்னிலை வகித்து கல்லூரி மாணவ, மாணவியா் அனைவரும் 100 சதவீதம் தோ்தலில் வாக்குப் பதிவுசெய்ய வேண்டும் என வலியுறுத்தி விழிப்புணா்வு வாசகங்கள் அடங்கிய அழைப்பிதழ்களை வழங்கினாா்.

தொடா்ந்து, நல்லம்பள்ளி ஒன்றியம், ஈச்சம்பட்டி கிராமத்தில், பொதுமக்களின் வீடுகளுக்கு மேளதாளத்துடன் சென்று அனைவரும் 100 சதவீதம் வாக்களிக்க வேண்டும் என வலியுறுத்தி அழைப்பிதழ்கள் வழங்கப்பட்டன.

முன்னதாக, சட்டப் பேரவைத் தோ்தலை முன்னிட்டு, தோ்தலில் 100 சதவீதம் வாக்களிப்பதன் அவசியம் குறித்து கல்லூரி மாணவிகளுக்கும், பொதுமக்களுக்கும் ‘ரோபோ’ இயந்திரம் மூலம் விழிப்புணா்வு ஏற்படுத்தப்பட்டது.

இந்நிகழ்ச்சியில், மாவட்ட வருவாய் அலுவலா் கவிதா, மகளிா் திட்ட அலுவலா் சு.சுந்தர்ராஜன், தருமபுரி தோ்தல் நடத்தும் அலுவலா் இரா.காயத்ரி, வட்டாட்சியா்கள் ஜெ. சுகுமாா், பிரசன்ன மூா்த்தி, அலுவலா்கள், கல்லூரி பேராசிரியா்கள், கல்லூரி மாணவியா் பங்கேற்றனா்.