ஹோர்முஸ் நீரிணையைக் கடக்க இந்திய கப்பல்களுக்கு அனுமதி! - ஈரான் தூதர் தகவல்! புதுச்சேரியில் என்.ஆர்.காங்கிரஸ், பாஜக தொகுதிப் பங்கீடு பத்திரிகையாளர்களுக்கு ஓய்வூதியம் உயர்வு: முதல்வர் ஸ்டாலின் உத்தரவு வேளச்சேரி - பரங்கிமலை பறக்கும் ரயில் சேவை அட்டவணை வெளியீடு கட்சியின் பெயரை அறிவித்தார் சசிகலா!எரிபொருள் தட்டுப்பாடு! எதிர்க்கட்சிகள் அமளியால் மக்களவை ஒத்திவைப்பு!அதிமுகவில் இணைந்தார் காளியம்மாள்! எரிபொருள் தட்டுப்பாடு! 17 கோடி பீப்பாய் கச்சா எண்ணெய் விடுவித்தது அமெரிக்கா!
/

சுதந்திர தின விழா: நாகையில் ஆட்சியர் தேசியக் கொடி ஏற்றி வைத்தார்

நாட்டின் 74-ஆவது சுதந்திர தின விழா நாகை விளையாட்டு மைதானத்தில் சனிக்கிழமை காலை நடைபெற்றது. 

News image
நாகையில் நடைபெற்ற சுதந்திர தின விழாவில் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கிய ஆட்சியர் பிரவீன் பி. நாயர்.
Updated On :15 ஆகஸ்ட் 2020, 6:42 am

DIN


நாகப்பட்டினம்: நாட்டின் 74-ஆவது சுதந்திர தின விழா நாகை விளையாட்டு மைதானத்தில் சனிக்கிழமை காலை நடைபெற்றது. 

மாவட்ட ஆட்சியர் பிரவீன் பி. நாயர் தேசியக் கொடியை ஏற்றி வைத்து,  காவல்துறையினரின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றார்.  

இதைத் தொடர்ந்து, மாவட்டத்தின் பல்வேறு அரசுத் துறைகளில் சிறப்பாகப் பணியாற்றிய 120 பேருக்குப் பாராட்டுச் சான்றுகளையும், அரசுத் துறைகள் சார்பில் 85 பயனாளிகளுக்கு ரூ.95.85 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளையும் ஆட்சியர் வழங்கினார்.

கரோனா தனிமைப்படுத்தும் முகாமுக்கு இடவசதி அளித்த 4 பேர் பாராட்டுச் சான்றிதழ் வழங்கி கௌரவிக்கப்பட்டனர். 

மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் செ. செல்வநாகரெத்தினம், மாவட்ட வருவாய் அலுவலர் மு. இந்துமதி, மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை கூடுதல் ஆட்சியர் எஸ்.எஸ். பிரசாந்த், மாவட்ட வன பாதுகாப்பு அலுவலர் எஸ். கலாநிதி, உதவி ஆட்சியர் (பயிற்சி) தீபனாவிஸ்வேஸ்வரி, துணை ஆட்சியர் (பயிற்சி) அபிநயா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.