ஈரானின் புதிய தலைவரும் கொல்லப்படுவார்! இஸ்ரேல் எச்சரிக்கை விவசாயிகளின் பயிர்க் கடன் தள்ளுபடி செய்ய நடவடிக்கை! - விஜய் அறிவிப்புபங்குச் சந்தை கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 1,650 புள்ளிகள் சரிவு! ஹோர்முஸ் நீரிணை வழியாக பயணிக்கும் கப்பல்களுக்கு கடற்படை பாதுகாப்பு: டிரம்ப்!நுழைவு வாயிலிலேயே வாயில் நுழையாத பெயர்: முதல்வர் கண்டனம்!திருச்சி ரயில்வே அலுவலகத்துக்கு ஹிந்தி பெயர்! தமிழிசை செளந்தரராஜன் எதிர்ப்பு! கிரிக்கெட்டில் சிஎஸ்கேவையும், தேர்தலில் தவெகவையும் தொட முடியாது! விஜய் ஈரானைத் தாக்க உதவி மறுப்பு... ஸ்பெய்ன் உடனான வர்த்தகத்தைத் துண்டித்தார் டிரம்ப்!ஈரானின் புதிய உச்ச தலைவராக கமேனியின் மகன் மோஜ்தபா தேர்வு!
/

மேட்டூர் அணையின் நீர் மட்டம் 99 அடியாக உயர்வு

மேட்டூர் அணையின் நீர் மட்டம் 99 அடியாக உயர்ந்துள்ளது. 

News image
Updated On :15 ஆகஸ்ட் 2020, 5:55 am

DIN


மேட்டூர் : மேட்டூர் அணையின் நீர் மட்டம் 99 அடியாக உயர்ந்துள்ளது. 

கர்நாடக மாநிலத்தில் காவிரியின் நீர் பிடிப்பு பகுதிகளிலும், கேரள மாநிலம் வயநாட்டிலும் தென்மேற்கு பருவமழை சற்று ஓய்ந்தது. இதனால் கபினி, கிருஷ்ணராஜசாகர் அணைகளுக்கு நீர் வரத்து குறைந்தது. நீர்வரத்து குறைந்ததால் கர்நாடக அணைகளிலிருந்து காவிரியில் வெளியேற்றப்பட்ட உபரிநீர் திறப்பும் குறைக்கப்பட்டது. 

கர்நாடக அணைகளிலிருந்து நீர் திறப்பு குறைக்கப்பட்டதால் மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு படிப்படியாக சரிந்து சனிக்கிழமை காலை அணைக்கு வரும் நீரின் அளவு விநாடிக்கு 15 ஆயிரம் கனஅடியாக சரிந்தது. நீர் வரத்து சரிந்தாலும் பாசனத்திற்கு திறக்கப்படும் நீரின் அளவைவிட அணைக்கு வரும் நீரின் அளவு அதிகமாக இருப்பதால் மேட்டூர் அணையின் நீர் மட்டம் மெல்ல உயர்ந்து வருகிறது. 

வெள்ளிக்கிழமை காலை 98.59 அடியாக இருந்த மேட்டூர் அணையின் நீர் மட்டம் சனிக்கிழமை காலை 99 அடியாக உயர்ந்தது. அணைக்கு விநாடிக்கு 15 ஆயிரம் கனஅடி வீதம் தண்ணீர் வந்துகொண்டிருக்கிறது. அணையிலிருந்து காவிரி டெல்டா பாசனத்திற்கு விநாடிக்கு 13,500 கனஅடி வீதம் தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது. அணையின் நீர் இருப்பு 63.55 டி.எம்.சியாக உள்ளது.

அணைக்கு வரும் நீரின் அளவு வெகுவாக குறைந்ததால் அணையின் நீர் மட்டம் 100 அடியாக உயருமா என்பது கேள்விக்குறியாக உள்ளது. மீண்டும் மழை பெய்தால் மட்டுமே அணைக்கு நீர் வரத்து அதிகரித்து அணையின் நீர் மட்டம் 100 அடியாக உயர வாய்ப்புள்ளது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.