பாஜகவில் இணையுமாறு மகனுக்கு மிரட்டல்! அபிஜீத் தீப்கேவின் தாயார் வேதனைதிராவிடர் கழகப் பிரசாரத்துக்கு அனுமதி மறுப்பு! தமிழக அரசுக்கு மு.க. ஸ்டாலின் கண்டனம்!காங்கோவில் 1,500-ஐ கடந்த எபோலா பலி எண்ணிக்கை! ஒரே வாரத்தில் 50% அதிகரிப்பு!வந்தே மாதரம் பாடுவதை கட்டாயமாக்கும் பாஜகவின் முயற்சியை கண்டிக்கிறோம்: திருமாவளவன்தமிழ்நாட்டுக்கு 4 டிஎம்சி தண்ணீர் திறக்க வேண்டும்: காவிரி மேலாண்மை ஆணையம்தடியடிக்கு உத்தரவிட்ட அமித் ஷா பதவி விலக வேண்டும்: மாநிலங்களவையில் கார்கே பேச்சுசிஜேபி போராட்டத்தில் ஈடுபட்டோர் மீதான வழக்குகள் ரத்து: தில்லி அரசு
/

அமெரிக்க - இஸ்ரேல் தாக்குதலில் ஈரானில் 1000-ஐ கடந்த உயிர்ப் பலி!

ஈரானின் மீதான அமெரிக்கா மற்றும் இஸ்ரேலின் தாக்குதல்களில் 1000-க்கும் அதிகமானோர் பலியாகியுள்ளனர்...

News image

அமெரிக்க மற்றும் இஸ்ரேலின் தாக்குதலில் கொல்லப்பட்ட ஈரானிய குழந்தைகளின் உடல்கள் வைக்கப்பட்டுள்ள சவப்பெட்டிகள்... - AP

Updated On :4 மார்ச் 2026, 7:11 pm IST

அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் படைகள் தாக்குதல்களால் ஈரானில் இதுவரை 1,046 பேர் கொல்லப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஈரானின் அணுசக்தித் திட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக, அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் படைகள் அந்நாட்டின் முக்கிய நகரங்கள் மீது கடந்த பிப். 28 அன்று முதல் தாக்குதல் நடத்தி வருகின்றன.

இந்தத் தாக்குதலில், ஈரானின் தலைமை மதகுரு ஆயதுல்லா அலி கமேனி மற்றும் அவரின் குடும்பத்தினர் கொல்லப்பட்டனர். இதையடுத்து, மத்திய கிழக்கு நாடுகளில் அமைந்துள்ள அமெரிக்க தளங்கள் மற்றும் கட்டமைப்புகளின் மீது ஈரானின் படைகள் தாக்குதல் நடத்தி வருகின்றன.

இந்த நிலையில், அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் இணைந்து ஈரான் மீது நடத்தி வரும் தாக்குதலில் இதுவரை 1,045 பேர் கொல்லப்பட்டதாக, ஈரான் அரசின் தியாகிகள் மற்றும் முன்னாள் வீரர்களின் விவகாரங்கள் அமைப்பு தெரிவித்துள்ளது.

இந்தத் தகவலானது, இதுவரை அடையாளம் காணப்பட்டு இறுதிச் சடங்கிற்குத் தயாரான உடல்களின் எண்ணிக்கை எனவும், கொல்லப்பட்டவர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கக் கூடும் எனவும் கூறப்பட்டுள்ளது.

முன்னதாக, ஈரானில் மகளிர் பள்ளிக்கூடத்தின் மீது இஸ்ரேல் நடத்திய வான்வழித் தாக்குதலில் சுமார் 160 சிறுமிகள் கொல்லப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Summary

1,046 people have been killed in Iran so far due to attacks by US and Israeli forces.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.