ஐக்கிய அரபு அமீரகத்தின் தலைநகர் அபுதாபியின் விமான நிலையம் அருகே ஈரான் நடத்திய தாக்குதலில் இந்தியர் ஒருவர் காயமடைந்துள்ளார்.
தெலங்கானா மாநிலம் ராஜண்னா சிர்சில்லா மாவட்டத்தைச் சேர்ந்த என். ராஜேஸ்வர ராவ் கடந்த ஓராண்டாக அபுதாபி விமான நிலையத்தில் தூய்மைப் பணியாளராகப் பணியாற்றி வருகிறார்.
இந்த நிலையில், அபுதாபி விமான நிலையத்தின் அருகில் ஈரான் நடத்திய தாக்குதலில் ராஜேஸ்வர ராவ் உள்ளிட்ட அங்கு பணிப்புரியும் சில பணியாளர்களுக்குக் காயங்கள் ஏற்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுபற்றி, ராஜேஸ்வர ராவ்வின் பெற்றோர்கள் கூறியதாவது:
“எங்கள் மகன் அபுதாபி விமான நிலையத்தில் கடந்த ஓராண்டாகப் பணிப்புரிந்து வருகிறார். தாக்குதலில் அவர் காயமடைந்துள்ளார். இதை அவர் காணொலி வாயிலாக எங்களுடன் பேசுகையில் தெரிவித்தார்.” எனக் கூறியுள்ளனர்.
இத்துடன், அபுதாபியில் சிக்கியுள்ள தங்களது மகனை உடனடியாக மீட்டு தாயகம் அழைத்து வருவதற்கு மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டுமென ராஜேஸ்வர ராவ்வின் குடும்பத்தினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.
முன்னதாக, அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் படைகளின் தாக்குதல்களில் ஈரானின் தலைமை மதகுரு ஆயதுல்லா அலி கமேனி கொல்லப்பட்டார். இதனால், மத்திய கிழக்கு நாடுகளில் அமைந்துள்ள அமெரிக்க தளங்களின் மீது ஈரான் தொடர் தாக்குதல் நடத்தி வருவது குறிப்பிடத்தக்கது.
Summary
An Indian has been injured in an attack carried out by Iran near Abu Dhabi Airport.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

குவைத் மீது தொடரும் ஈரானின் தாக்குதல்! அரசுக் கட்டமைப்புகள் சேதம்!

அமெரிக்காவுக்குப் பதிலடி! குவைத், ஜோர்டான் மீதான ஈரானின் தாக்குதல் தீவிரம்!

ஈரான் மீது அமெரிக்கா பயங்கர தாக்குதல்! பாலங்கள், எரிசக்தி கட்டமைப்புகள் பலத்த சேதம்!
குவைத் மீதான ஈரானின் தாக்குதலில் இந்தியர் பலி! மத்திய அரசு கண்டனம்!
விடியோக்கள்

ஜெயலலிதா போல் உண்ணாவிரதம் இருப்பாரா விஜய்? | TVK | CM Vijay | DkShivakumar | Jagadeswaran interview




