சேலம் - திண்டுக்கல்; ஒசூர் - ஓமலூர் இருவழி ரயில் தடத்துக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல்!பாரத ரத்னா பெற்ற 92 வயது விஞ்ஞானிக்கு எஸ்.ஐ.ஆர். நோட்டீஸ்! வினோதமான கேள்வி! முதல்வர் விஜய்யின் உடல்மொழி மனித மாண்புகளுக்கு எதிரானது! திருமாவளவன் கண்டனம்செங்குன்றம் புதிய பேருந்து நிலையம் திறப்பு எப்போது? பயணிகள் வேதனை!திடீர் திருப்பம்! தவெக நிர்வாகி கொலைக்குப் பின்னணியில் ரீல்ஸ் காரணமா?மதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தலுக்கான திமுக வேட்பாளர்கள் அறிவிப்பு!

ஈரானின் இதயத்தைத் துளைத்த ஏவுகணைகள்.. அமெரிக்கா வெளியிட்ட புதிய விடியோ!

ஈரானில் நடத்தப்பட்ட ஏவுகணைத் தாக்குதல் தொடர்பான விடியோவை அமெரிக்கா வெளியிட்டுள்ளதைப் பற்றி...

ஈரான் மீது அமெரிக்கா நடத்திய ஏவுகணைத் தாக்குதலில் விடியோ. - @CENTCOM

Published On :

ஈரானில் நடத்தப்பட்ட ஏவுகணைத் தாக்குதல் தொடர்பான விடியோவை அமெரிக்கா வெளியிட்டுள்ளது.

ஈரானின் அணுஆயுத கொள்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் ஆகிய இரு நாடுகளும் சேர்த்து கடந்த சனிக்கிழமை நடத்திய அதிரடி தாக்குதலில் ஈரானின் மதகுரு அலி அயத்துல்லா கமேனி உள்பட ஈரானின் முக்கியத்துவம் வாய்ந்த 40-க்கும் மேற்பட்ட தலைவர்கள் கொல்லப்பட்டனர்.

ஈரான் மீது அமெரிக்கா-இஸ்ரேல் நடத்திய கூட்டுத் தாக்குதல்களுக்குப் பதிலடியாக, அமெரிக்காவுக்கு ஆதரவு தெரிவிக்கும் ஐக்கிய அரபு அமீரகத்தின் சௌதி, குவைத், துபை உள்ளிட்ட நகர்கள் மீதும் ஈரான் ஏவுகணைகள் மற்றும் டிரோன்கள் ஏவி கடுமையான தாக்குதலைத் தொடர்ந்து வருகிறது. மேலும், அமெரிக்க ராணுவத் தளங்கள் அமைந்துள்ள வளைகுடா நாடுகளை ஈரான் குறிவைத்துத் தாக்கி வருகிறது.

ஈரானின் மிகவும் பாதுகாப்பான வான்பாதுகாப்பு அமைப்புகளையும் மீறி, ‘ஈரானின் இதயம்’ என்றழைக்கப்படும் தலைநகர் தெஹ்ரானில் உள்ள பாஸ்டர் தெரு அந்த நாட்டின் மிக முக்கியமான அரசியல் மற்றும் நிர்வாக மையமாகும்.

அந்த பகுதியின் மிகவும் பரபரப்பான நேரத்தில் அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் இரு நாடுகளும் நடத்திய கொடூரத் தாக்குதலில்தான் ஈரானின் உச்சத்தலைவர் மதகுரு அலி அயத்துல்லா கமேனி உள்பட பலர் கொல்லப்பட்டனர்.

இந்த நிலையில், ஈரான் மீது அமெரிக்கா நடத்திய ஏவுகணைத் தாக்குதல்கள் தொடர்பான புதிய விடியோ ஒன்றை அமெரிக்கா வெளியிட்டுள்ளது.

அந்த விடியோவில், “அமெரிக்க படைகள் ஈரானை மன்னிப்புக் கேட்க முடியாத அளவுக்கு தாக்குகின்றன. ஆபரேஷன் எபிக் ஃபியூரியில் ஈரானின் ஏவுகணைத் தாக்கி அழிப்பதில் லேசர்கள் கவனம் செலுத்துகின்றன” எனக் குறிப்பிட்டுள்ளது.

Summary

Video footage released by the U.S. Department of Defense shows Tomahawk missile strikes on Iran from the guided-missile destroyer USS Spruance, as well as air strikes conducted by U.S. Central Command during Operation Epic Fury.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.