சென்னையிலிருந்து வார இறுதியில் வெளியூர் செல்ல திட்டமா? மாணவர் பாரதிதாசன் கண்ணீர் விடியோ! சமூக நீதி நாளில் இப்படி ஒரு அநீதி - உதயநிதி2027-ஆம் ஆண்டுக்கான சிபிஎஸ்இ 10, 12ஆம் வகுப்புத் தேர்வு அட்டவணை! டாடா குழுமத் தலைவராக சந்திரசேகரன் தொடர்வார்! முடிவை மாற்றிய நிர்வாகக் குழு!இன்று கல்வி, நாளை வேறாக இருக்கலாம்! மனநிலையை மாற்ற தமிழக அரசுக்கு உச்ச நீதிமன்றம் அறிவுரை!நவோதயா பள்ளிகளுக்கு இடங்கள் தேர்வு செய்ய தமிழக அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவு!மதுரை எய்ம்ஸ் புறநோயாளிகள் பிரிவு ஜனவரி 1 முதல் தொடக்கம்! பெரியார் பிறந்த நாள்: மு.க. ஸ்டாலின் மரியாதை! சமூகநீதி நாள் உறுதிமொழி ஏற்பு!சமூக ஏற்றத்தாழ்வுகளுக்கு எதிராக வாழ்ந்தவர் பெரியார்! அண்ணாமலை புகழாரம்!முன்னாள் மத்திய அமைச்சர் சுதர்சன நாச்சியப்பன் காலமானார்!

ஆப்கனின் முதன்மை விமானப் படைத் தளத்தின் மீது பாக். தாக்குதல்!

ஆப்கானிஸ்தானின் பாக்ரம் விமானப் படைத் தளத்தின் மீதான பாகிஸ்தானின் தாக்குதல் குறித்து...

ஆப்கானிஸ்தானின் பாக்ரம் விமானப் படைத் தளம் (கோப்புப் படம்) - AP

Published On :

ஆப்கானிஸ்தானின் பிரபல பாக்ரம் விமானப் படைத் தளத்தின் மீது பாகிஸ்தான் தாக்குதல் நடத்தியுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆப்கானிஸ்தானின் தலிபான் அரசுக்கு எதிராக ஆபரேஷன் கசாப் லில் ஹக் எனும் பெயரில் பாகிஸ்தான் கடந்த பிப். 26 முதல் ராணுவ நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.

இதன்மூலம், இருநாடுகள் இடையிலான 2,600 கி.மீ. எல்லையில் அமைந்துள்ள ஆப்கானிஸ்தானின் 53 ராணுவத் தளங்கள் மீது பாகிஸ்தான் தாக்குதல் நடத்தியுள்ளது.

இந்த நிலையில், ஆப்கானிஸ்தானின் முதன்மையான விமானப் படைத் தளமாகக் கருதப்படும் பாக்ரம் விமானப் படைத் தளத்தின் மீது மிகப் பெரியளவிலான தாக்குதல்கள் நடத்தப்பட்டதாக, பாகிஸ்தான் ராணுவம் புதன்கிழமை (மார்ச் 4) தெரிவித்துள்ளது.

இந்தத் தாக்குதலில், அங்கு அமைந்திருந்த முக்கிய கட்டமைப்புகள் முழுவதுமாக அழிக்கப்பட்டதாகக் கூறப்பட்டுள்ளது. ஆப்கானிஸ்தானின் 50-க்கும் அதிகமான ராணுவத் தளங்களின் மீது பாகிஸ்தான் வான்வழித் தாக்குதல்களை நடத்தியதை தலிபான் அரசு உறுதி செய்துள்ளது.

முன்னதாக, பாகிஸ்தானில் நடைபெறும் பயங்கரவாதத் தாக்குதல்களுக்கு ஆப்கானிஸ்தானின் தலிபான் அரசுதான் காரணம் என அந்நாட்டு அரசு நீண்டகாலமாகக் குற்றம்சாட்டி வந்ததைத் தொடர்ந்து இந்தத் தாக்குதல்கள் நடத்தப்படுகின்றன.

மேலும், பாகிஸ்தான் தாக்கியதாகக் கூறப்படும் பாக்ராம் விமானப் படைத் தளத்தை மீண்டும் அமெரிக்கப் படைகளின் கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவர வேண்டுமென கடந்த 2025 ஆம் ஆண்டு அதிபர் டொனால்ட் டிரம்ப் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.

Summary

It has been reported that Pakistan has attacked the famous Bagram Air Base in Afghanistan.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.