

பாகிஸ்தானில் திருமண நிகழ்வு கூட்டத்தில் நிகழ்த்தப்பட்ட தற்கொலைப் படைத் தாக்குதலில் 7 பேர் பலியாகினர்.
பாகிஸ்தானின் தேரா இஸ்மாயில் கான் மாவட்டத்தில் வெள்ளிக்கிழமை திருமண நிகழ்வின் போது தற்கொலைப் படைத் தாக்குதல் நடந்தது.
ஆரம்பத்தில், இந்த சம்பவத்தில் 3 பேர் பலியானதாக அறிவிக்கப்பட்டது.
அதேசமயம் படுகாயமடைந்த நான்கு பேர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட பிறகு இறந்தனர். குண்டுவெடிப்பில் ஒரு கட்டடம் இடிந்து விழுந்ததாக உள்ளூர் காவல்துறை அதிகாரி முகமது அட்னன் தெரிவித்தார்.
இந்தத் தாக்குதலுக்கு இதுவரை எந்த அமைப்பும் பொறுப்பேற்கவில்லை. எனினும், இந்த தாக்குதல் சம்பவத்தில் பாகிஸ்தான் தலிபான்கள் குழு மீது சந்தேகம் எழுந்துள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.