மோடி - டிரம்ப் உரையாடலில் எலான் மஸ்க் இணைந்தாரா? வெளியுறவு அமைச்சகம் மறுப்பு இந்தியாவில் மகப்பேறு இறப்பு விகிதம் 80 சதவீதம் குறைவு: அறிக்கையில் தகவல்எஃப்பிஐ இயக்குநா் மின்னஞ்சலில் ஊடுருவிய ஈரான் ஹேக்கா்கள்!திமுக எம்.பி. மகள் காா் மோதி விபத்து: பாதிக்கப்பட்டவருக்கு இழப்பீடு வழங்க உத்தரவுவாக்களித்ததை உறுதி செய்யும் குறுஞ்செய்தி: திட்டத்தை அமல்படுத்தக் கோரி மனு
/

விசாகப்பட்டினத்தில் பழங்குடியினர் வசிக்கும் 18 கிரமங்களில் வெள்ளம்

விசாகப்பட்டினத்தில் பெய்த கன மழையால் பழங்குடியினர் வசிக்கும் 18 கிராமங்கள் வெள்ளத்தில் மூழ்கியது.

News image

கோப்புப்படம்

Updated On :16 ஆகஸ்ட் 2020, 12:17 pm

ANI

விசாகப்பட்டினத்தில் பெய்த கன மழையால் பழங்குடியினர் வசிக்கும் 18 கிராமங்கள் வெள்ளத்தில் மூழ்கியது.

விசாகப்பட்டினம் மாவட்டம் லக்ஷ்மிபுரம் மற்றும் புங்கபுட் பகுதியில் 18-க்கும் மேற்பட்ட கிராமங்களில் பழங்குடியினர் வசித்து வருகின்றனர். கடந்த சில நாள்களாக பெய்து வரும் கனமழையால் இப்பகுதியில் வெள்ளம் ஏற்பட்டுள்ளது.

அந்த கிராமங்களுக்கு செல்லும் சாலைகள் வெள்ளத்தால் மூழ்கியதால் ரேசன் பொருள்களும் தடைபெற்றுள்ளது. தற்போது உணவு இல்லாமல் அனைவரும் தவித்து வருகின்றனர்.

இதுகுறித்து அவர்கள் கூறுகையில், கடந்த காலங்களில் சாலைகளை சரி செய்ய பல மனுக்கள் மாவட்ட ஆட்சியர் மற்றும் சட்டமன்ற உறுப்பினரிடம் வழங்கியும் சரி செய்யவில்லை.

குர்லா கிராம பகுதியில் கட்டிய பாலம் கடந்த ஆண்டு ஏற்பட்ட வெள்ளதிதில் அடித்து செல்லப்பட்டது. அதன் பிறகு அதையும் சரி செய்யவில்லை என கூறினார்கள்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.