காரைக்குடி: 100 நாள் வேலை திட்டத்தை 200 நாளாக உயர்த்த வலியுறுத்தி கையெழுத்து இயக்கம்
காரைக்குடி அருகே 100 நாள் வேலை திட்டத்தை 200 நூறு நாளாக உயர்த்த வலியுறுத்தி பெண்கள் மற்றும் கிராமத்தினரிடம் கையெழுத்து இயக்கம் நடைபெற்றது.


காரைக்குடி அருகே 100 நாள் வேலை திட்டத்தை 200 நூறு நாளாக உயர்த்த வலியுறுத்தி பெண்கள் மற்றும் கிராமத்தினரிடம் கையெழுத்து இயக்கம் நடைபெற்றது.
சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அருகே பெரிய கொட்டகுடி கிராமத்தில் முன்னாள் பாரதப் பிரதமர் ராஜீவ் காந்தியின் 76-வது பிறந்த நாள் விழா ராஜீவ் காந்தி பஞ்சாயத்து ராஜ் சங்கதன் சார்பில் வியாழக்கிழமை கொண்டாடப்பட்டது.
அதன் மண்டல ஒருங்கிணைப்பாளர் ஒய்.பழனியப்பன் தலைமையில் பெரிய கொட்டகுடி கிராமத்தில் மகாத்மா காந்தி தேசிய வேலை உறுதித்திட்ட பயனாளிகளுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டது.
இதில் கொட்டகுடி ஊராட்சித்தலைவர் தனபால், மாவட்ட பஞ்சாயத்துராஜ் சங்கதன் ஒருங்கிணைப்பாளர் சிதம்பரம் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
பின்னர் கரோனா தொற்று பாதிப்பு காரணமாக 100 நாள் வேலை திட்டத்தை 200 நாளாக உயர்த்திட வேண்டும் என்றும் பஞ்சாயத்துராஜ் சட்டத்தின்படி பஞ்சாயத்து தலைவர்களின் அதிகாரம் காக்கப்பட வேண்டும் என்றும் பெண்கள் மற்றும் கிராமத்தினரிடம் கையெழுத்து இயக்கம் நடைபெற்றது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...