மோடி - டிரம்ப் உரையாடலில் எலான் மஸ்க் இணைந்தாரா? வெளியுறவு அமைச்சகம் மறுப்பு இந்தியாவில் மகப்பேறு இறப்பு விகிதம் 80 சதவீதம் குறைவு: அறிக்கையில் தகவல்எஃப்பிஐ இயக்குநா் மின்னஞ்சலில் ஊடுருவிய ஈரான் ஹேக்கா்கள்!திமுக எம்.பி. மகள் காா் மோதி விபத்து: பாதிக்கப்பட்டவருக்கு இழப்பீடு வழங்க உத்தரவுவாக்களித்ததை உறுதி செய்யும் குறுஞ்செய்தி: திட்டத்தை அமல்படுத்தக் கோரி மனு
/

லாலு பிரசாத் யாதவின் பாதுகாப்பு காவலர்கள் 9 பேருக்கு கரோனா

ராஷ்ட்ரீய ஜனதா தள கட்சியின் தலைவர் லாலு பிரசாத் யாதவின் பாதுகாப்பு காவலர்கள் 9 பேருக்கு இன்று கரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.

News image

கோப்புப்படம்

Updated On :21 ஆகஸ்ட் 2020, 8:16 am

ANI

ராஷ்ட்ரீய ஜனதா தள கட்சியின் தலைவர் லாலு பிரசாத் யாதவின் பாதுகாப்பு காவலர்கள் 9 பேருக்கு இன்று கரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.

பிகாரின் முன்னாள் முதல்வரும் ராஷ்ட்ரீய ஜனதா தள கட்சியின் தலைவருமான லாலு பிரசாத் யாதவ் சில நாள்களுக்கு முன் உடல்நலக் குறைவால் ராஞ்சி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

இந்நிலையில், மருத்துவமனையின் விடுதியில் தங்கிருக்கும் யாதவின் பாதுகாப்பிற்காக விடுதி வெளியில் காவல் துறையினர் பாதுகாப்பு பணியில் உள்ளனர். அவர்களுக்கு கரோனா பரிசோதனை செய்யப்பட்டதில் 9 பேருக்கு தொற்று இருப்பது இன்று உறுதி செய்யப்பட்டது.

இதையடுத்து, அவர்களை பாதுகாப்புப் பணியில் இருந்து விடுவித்து சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.