
முதுமலை புலிகள் காப்பகத்தில் நடைபெற்ற விநாயகர் சதுர்த்தி விழாவில் யானைகள் மணியாட்டி, பூஜை செய்து மண்டியிட்டு வணங்கின.
நீலகிரி மாவட்டம் முதுமலை புலிகள் காப்பகத்தில் உள்ள தெப்பக்காடு வளர்ப்பு யானைகள் முகாமில் நடைபெற்ற விநாயகர் சதுர்த்தி விழாவில் குட்டியானைகள் அங்குள்ள விநாயகர் கோவிலில் மணியாட்டி, பூஜை செய்து மண்டியிட்டு விநாயகரை வணங்கின.
பூஜையைத் தொடர்ந்து முகாமில் யானைகள் அணிவகுத்து நின்றன. யானைகளுக்கு இனிப்பு மற்றும் சிறப்பு உணவுகள் வழங்கப்பட்டன.
விழாவில் புலிகள் காப்பக கள இயக்குநர் ஸ்ரீனிவாஸ் ஆர்.ரெட்டி. துணை கள இயக்குநர் செண்பகப் பிரியா மற்றும் அலுவலர்கள் ஊழியர்கள் கலந்து கொண்டனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.