இந்திய விமானப்படை அதிகாரி தற்கொலை
ஜம்முவில் உள்ள விமானப் படை முகாமில் இந்திய விமானப் படை அதிகாரி துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்டார்.

இந்திய விமானப்படை அதிகாரி தற்கொலை (கோப்புப்படம்)

இந்திய விமானப்படை அதிகாரி தற்கொலை (கோப்புப்படம்)
ஜம்முவில் உள்ள விமானப் படை முகாமில் இந்திய விமானப் படை அதிகாரி துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்டார்.
உத்திர பிரதேசத்தை சேர்ந்தவர் இந்தர் பால் சிங் (வயது 53). இவர் ஜம்முவின் புறநகரில் அமைந்துள்ள கலுசக்கின் விமானப்படை தளத்தில் பணியாற்றி வருகிறார்.
இந்நிலையில், முகாமில் இருந்த பால் சிங், வெள்ளிக்கிழமை திடீரென்று தனக்கு வழங்கப்பட்ட துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்டார். அங்கு மற்ற வீரர்கள் பால் சிங்கை உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர்.
ஆனால் அவர் உயிரிழந்து விட்டதாக மருத்துவர்கள் கூறினார்கள். இன்று அவரின் உடல் குடும்பத்தாரிடம் ஒப்படைக்கப்பட்டது.
அவரது தற்கொலைக்கான காரணம் இன்னும் தெரியவில்லை. இதுகுறித்து வழக்கு பதிவு செய்யப்பட்டு விசாரணை நடந்து வருகிறது.
இந்த மாதம் ஜம்மு பகுதியில் விமானப் படை வீரர் ஒருவர் முன்பே தற்கொலை செய்து கொண்டார். கடந்த ஆகஸ்ட் 8-ம் தேதி, உதம்பூர் மாவட்டத்தில் தனது துப்பாக்கியால் சுட்டுத் தற்கொலை செய்தது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது


வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...