உள்நாட்டு உற்பத்தி இயற்கை எரிவாயு விலையை உயா்த்தி மத்திய அரசு நடவடிக்கை புதிய வருமான வரிச் சட்டம் இன்று முதல் அமல் ரத்த வங்கிகளின் செயல்பாடு: தேசிய அளவில் கண்காணிக்கத் திட்டம் இஸ்ரேலில் மீண்டும் மரண தண்டனை- நாடாளுமன்றத்தில் சா்ச்சை சட்டம் நிறைவேற்றம் வெளிநாட்டு பங்களிப்பு திருத்த மசோதா: எதிா்க்கட்சிகளின் குற்றச்சாட்டு தவறானது- கிரண் ரிஜிஜு 6-9-ஆம் வகுப்புகளுக்கு இன்றுமுதல் முழு ஆண்டுத் தோ்வு
/

கர்நாடகத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த எம்.பி., எம்.எல்.ஏ. உள்பட 12 பேருக்கு கரோனா

குல்பர்காவைச் சேர்ந்த பாஜக எம்.பி. மருத்துவர் உமேஷ் ஜாதவ் மற்றும் அவரது மகனும் எம்.எல்.ஏ வுமான அவினாஷ் ஜாதவ் ஆகியோரது குடும்ப உறுப்பினர்கள் மற்றும் ஊழியர்கள் என 12 பேருக்கு கரோனா உறுதியாகியுள்ளது.

News image

பாஜக எம்.பி. மருத்துவர் உமேஷ் ஜாதவ் மற்றும் அவரது மகனும் சட்டமன்ற உறுப்பினருமான அவினாஷ் ஜாதவ்

Updated On :24 ஆகஸ்ட் 2020, 12:03 pm

PTI

குல்பர்காவைச் சேர்ந்த பாஜக எம்.பி. மருத்துவர் உமேஷ் ஜாதவ் மற்றும் அவரது மகனும் சட்டமன்ற உறுப்பினருமான அவினாஷ் ஜாதவ் ஆகியோரது குடும்ப உறுப்பினர்கள் மற்றும் ஊழியர்கள் என 12 பேருக்கு கரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதுகுறித்து எம்.பி. உமேஷ் கூறுகையில், எனது குடும்ப உறுப்பினர்கள் மற்றும் ஊழியர்கள் என மொத்தம் 12 பேருக்கு கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. 

நேற்று எனது மனைவி, மகள், மருமகள் மற்றும் எனது ஓட்டுனர் உள்ளிட்ட எனது குடும்ப உறுப்பினர்கள் அனைவரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளோம் என கூறினார்.

சட்டமன்ற உறுப்பினர் ஜாதவ் கூறுகையில், எனது இரண்டு உதவியாளர்கள், எனது மகனின் உதவியாளர் மற்றும் ஒரு ஓட்டுனருக்கு தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டதாக கூறினார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.