மகாராஷ்டிரத்தில் வகுப்பறைகளாக மாறிய வீட்டுச் சுவர்கள்
சோலாப்பூர் அருகே இணையவழியாக கல்வி கற்க முடியாத ஏழை மாணவர்களுக்கு அங்குள்ள வீட்டுச் சுவர்களில் பாடங்களை ஓவியமாக வரைந்து கற்பிக்கப்படுகிறது.

கோப்புப்படம்

கோப்புப்படம்
மகாராஷ்டிரம்: சோலாப்பூர் அருகே இணையவழியாக கல்வி கற்க முடியாத ஏழை மாணவர்களுக்கு அங்குள்ள வீட்டுச் சுவர்களில் பாடங்களை ஓவியமாக வரைந்து கற்பிக்கப்படுகிறது.
கரோனா தொற்றால் பள்ளிகள் மூடப்பட்டுள்ள நிலையில் அனைத்து பள்ளிகளும் தற்போது இணையவழி மூலம் பாடங்களை கற்பித்து வருகின்றனர். இந்நிலையில் பல ஏழை மாணவர்களால் ஸ்மார்ட் போன் வாங்க முடியாமல் படிக்க முடியாமல் தவித்து வருகின்றனர்.
இந்நிலையில், மகாராஷ்டிர மாநிலம் சோலாப்பூர் நகரில் ஸ்மார்ட் போன் பயன்படுத்த முடியாத பல ஏழை மாணவர்களுக்கு கல்வியை கற்பிக்க புதிய நடைமுறையை பள்ளி நிர்வாகம் அறிமுகப்படுத்தியுள்ளனர்.
சோலாப்பூரின் நிலம்நகர் பகுதியில் உள்ள 300க்கும் அதிகமான வீடுகளின் வெளிப்புறச் சுவர்களில் 1 முதல் 10 ஆம் வகுப்பு வரையிலான பல்வேறு பாடங்களின் பாடப்புத்தகங்களிலிருந்து எளிமையான பாடங்களை மாணவர்களுக்கு புரியும்படி ஆஷா மராத்தி வித்யாலயா பள்ளி நிர்வாகத்தினர் வரைந்துள்ளனர்.
இதுகுறித்து ஆஷா மராத்தி வித்யாலயா பள்ளி ஆசிரியர் ராம் கெய்க்வாட் கூறுகையில்,
சுவற்றில் பாடங்களை வரைந்தது மூலம் மாணவர்கள் சமூக இடைவெளிவிட்டு நின்று கற்க முடியும். மேலும் இப்பகுதிகளில் சுமார் 1,700 மாணவர்கள் பள்ளிகளில் படித்து வருகின்றனர்.
இந்த மாணவர்கள் ஏழைக் குடும்பங்களிலிருந்து பள்ளிக்கு வருபவர்கள். அவர்களின் பெற்றோர்கள் பெரும்பாலும் கூலித்தொழிலாளிகள்.
இணைய கல்வி என்பது தற்போதைய கரோனா பேரிடரில் அவசியமாக கருதப்பட்டாலும், அதற்கு ஸ்மார்ட் போன், இணைய வசதிகள் என தொழிற்நுட்ப வசதிகள் தேவைப்படுகிறது.
ஆனால், எங்கள் பள்ளியின் பெரும்பான்மையான மாணவர்களின் பெற்றோருக்கு ஸ்மார்ட்போன்கள் இல்லை. எனவே இணையவழிக் கல்வி அவர்களுக்கு தொலைதூர கனவாக உள்ளது.
எனவே, எங்கள் பள்ளிக்கு அருகில் அமைந்துள்ள வீடுகளின் சுவர்களை பாடப்புத்தகங்களில் உள்ள பாடங்களை ஓவியமாக வரையும் யோசனையை பள்ளி கொண்டு வந்தது.
நீலம்நகரில் உள்ள வீடுகளின் சுவர்களில் பாடப்புத்தகங்களில் இருக்கும் உள்ளடக்கங்களை எளிமையாக புரிந்துகொள்ளக்கூடிய மற்றும் சுவாரஸ்யமானதாக மாற்றி வரைந்துள்ளோம்.
சுவர்களில் வரையப்பட்ட பாடங்களில் கடிதங்கள், எண்கள், சொல் மற்றும் வாக்கிய உருவாக்கம், இலக்கணம், கணித சூத்திரங்கள், பொது அறிவு மற்றும் பல்வேறு பாடங்கள் அடங்கும் என கூறினார்.
ஆஷா மராத்தி வித்யாலயாவின் முதல்வர் தஸ்லீம் பதான் கூறுகையில், கிட்டத்தட்ட 1,700 மாணவர்கள், பெரும்பாலும் நிலம்நகரில் இருக்கும் மாணவர்கள் பயன்படும் விதமாக இத்திட்டத்தை உருவாக்கியுள்ளோம்.
சுவர்களில் வரையப்பட்ட பாடங்கள் எங்கள் பள்ளி மாணவர்களுக்கு பயனளிப்பது மட்டுமல்லாமல், அருகிலுள்ள இரண்டு முதல் மூன்று பள்ளிகளைச் சேர்ந்த மாணவர்களுக்கும் பயனளிக்கின்றன என கூறினார்.
இதுகுறித்து அப்பகுதி மக்கள் கூறுகையில், பள்ளி செயல்படாத நிலையில் ஸ்மார்ட்போன் இல்லாததால் எங்கள் குழந்தைகள் படிக்க முடியாமல் தவித்து வந்தனர். தற்போது சுவர்களில் பாடத்திட்டங்களை வரைந்துள்ளதால் பாதுகாப்புடன் பயின்று வருகின்றனர் என கூறினார்கள்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது


வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...