கம்பம்: தமிழக-கேரள எல்லைப் பகுதியில் ஆண்டுக்கு ஒரே ஒருமுறை, ஒரு நாள் மட்டும் பூக்கும் நிஷா காந்தி மலர் பொதுமக்களை பெரிதும் கவர்ந்தது.
தமிழக கேரள எல்லைப் பகுதியான தேனி மற்றும் இடுக்கி மாவட்ட பகுதிகளில் நிஷாகந்தி மலர் செடிகள் உள்ளது. அதிக வாசனையுடன் இரவில் மட்டுமே பூக்கும் இந்த மலர் குளுமையான சீதோஷ்ண நிலை உள்ள இடங்களில் காணப்படும்.
குறிப்பாக தமிழக கேரள எல்லைப் பகுதியான இடுக்கி மற்றும் தேனி மாவட்டங்களில் அதிகம் காணப்படும்.
தேனி மாவட்டம் லோயர் கேம்ப் மற்றும் கம்பம் ஆகிய பகுதிகளில் கடந்த இரண்டு நாள்களுக்கு முன்பு இரவு ஒன்பது மணிக்கு மேல் பூத்த நிஷாகந்தி மலர் அதிகாலை 5 மணி வரை இருந்தது.
லோயர் கேம்பைச் சேர்ந்த ஜீவரத்தினம் என்பவர் கூறியது, ஆண்டுக்கு ஒருமுறை மட்டுமே நிஷாகந்தி மலர் பூக்கிறது, அதிக வாசனையுடன் இந்த மலர் இருக்கும். கடந்த இரண்டு தினங்களுக்கு முன்பு இரவு 9 மணிக்கு மேல் மலர தொடங்கிய பூ அதிகாலை சுமார் 5 மணி வரை இருந்தது. அதன் பின்னர் வாடிவிட்டது.
கடந்த ஆண்டும் இதே போல் ஒரு முறைதான் பூத்தது என்றார். ஆண்டிற்கு ஒருமுறை மட்டுமே பூக்கும் இந்த மலரை அப்பகுதியில் இருந்தவர்கள் பார்த்து மகிழ்ந்தனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

மகர ராசிக்கு இன்று எப்படி? தினப்பலன்கள்!

10-ஆம் வகுப்பு சிபிஎஸ்இ கணித மதிப்பெண் சரிவு: மறு தேர்வுக்கு விண்ணப்பிக்கும் ஆயிரக்கணக்கான மாணவர்கள்!

தமிழக டிஜிபி நியமன உத்தரவில் திருத்தம் கோரி தலைமைத் தேர்தல் ஆணையத்தில் திமுக மனு

தொகுதி அலசல்...அவிநாசி (தனி) மத்திய அமைச்சரை எதிர்கொள்ளும் இளம் பெண் மருத்துவர்!
வீடியோக்கள்

#ipl2026 | சிங்க நடைபோடும் சிஎஸ்கே: அடுத்து சன்ரைசர்ஸ்தான்! | Chennai Super Kings | Noor Ahmed |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையில் யார் சொல்வது உண்மை ? | Delimitation | MK Stalin | Annamalai | BJP | DMK
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையை எதிர்த்து நாளை தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி ஏற்றும் போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு

ராத்து ராசன் பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு


