ஒடிசாவின் பத்ரகில் பலத்த மழை பெய்து வருவதால் பைதாராணி ஆற்றின் நீர்மட்டம் உயர்ந்து வெள்ள அபாய நிலை ஏற்பட்டுள்ளது.
ஒடிசா மாநிலத்தில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. இதனால், பைதராணி மற்றும் பிற ஆறுகளின் நீர்மட்டம் வேகமாக உயர்ந்து வருகிறது.
இதையடுத்து, பைதராணி ஆற்றொர கிராமமான சதுர்பூஜ்பூர், ஹஸ்னாபாத் மற்றும் பண்டரிபோகாரி கிராம மக்கள் பாதுகாப்பான இடத்திற்கு மாற்றப்பட்டு வருகின்றனர். இங்குள்ள பகுதிகளில் வெள்ள நீர் இடுப்பளவு சூழ்ந்துள்ளதால் மக்கள் பிற பகுதிகளுக்கு செல்ல சிரமப்படுகின்றனர்.
மேலும் புவனேஸ்வர் வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட அறிக்கையில், இன்று பல மாவட்டங்களில் இடியுடன் கூடிய கனமழை பெய்யும் என்று கூறியுள்ளது.
கடந்த புதன்கிழமை, ஒடிசா தலைமைச் செயலாளர் ஆசித் திரிபாதி தலைமையில், 12 மாவட்டங்களைச் சேர்ந்த வருவாய்த்துறை, நீர்வளத் துறை அதிகாரிகள் மற்றும் பிற சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளுடன் மழை மற்றும் வெள்ள சூழ்நிலைகளைக் குறித்து ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
பாலசூர், மயூர்பஞ்ச், பத்ராக், ஜஜ்பூர், கேந்திரபாரா மற்றும் ஜகத்சிங்பூர் ஆகிய இடங்களில் ஒடிசா பேரிடர் மீட்புப் படை மற்றும் தேசிய பேரிடர் மீட்புப் படை குழுக்களையும் மாநில அரசு அனுப்பியுள்ளதாக அதிகாரப்பூர்வ அறிக்கை வெளியிட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
மே 4 - எங்கும் தாமரை மலரும்! பாஜக

மதுரை நகரை வந்தடைந்தார் கள்ளழகர்! எதிர்சேவையில் ஆடல், பாடலுடன் உற்சாக வரவேற்பு!!

டாலருக்கு நிகரான இந்திய மதிப்பு ரூ. 95-ஐ கடந்தது!

பெங்களூருவில் பெய்த கனமழைக்கு சுவா் இடிந்து விழுந்து 7 போ் பலி: பிரதமர் மோடி இரங்கல்; நிவாரண நிதி அறிவிப்பு
வீடியோக்கள்
குடிநீர் குழாய் வேண்டாம்!! ஊற்றுத்தண்ணீரை விரும்பும் கிராம மக்கள்! | Pudukottai
இணையதளச் செய்திப் பிரிவு

த்ரிஷ்யம் 3 டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

எல்லா டீமும் ஏன் தப்பு தப்பா விளையாடுறாங்க..?
தினமணி செய்திச் சேவை

பில்லா ரீ-ரிலீஸ் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு


