அமெரிக்காவை மிகப் பெரிய பொருளாதார கட்டமைப்பு கொண்ட நாடாக உருவாக்குவேன்: டொனால்ட் டிரம்ப் 

அமெரிக்காவில் வரும் நவம்பா் மாதம் நடைபெறவிருக்கும் அதிபா் தோ்தலில், குடியரசு கட்சி வேட்பாளராக தற்போதைய அதிபர் டொனால்ட் டிரம்ப் அதிகாரப்பூா்வமாகத் தோ்ந்தெடுக்கப்பட்டாா்.
வெள்ளை மாளிகையில் நடைபெற்று வரும் குடியரசு கட்சியின் தேசிய மாநாட்டின் நான்காவது நாள் கூட்டத்தில் பேசும் அதிபர் டொனால்ட் டிரம்ப்.
வெள்ளை மாளிகையில் நடைபெற்று வரும் குடியரசு கட்சியின் தேசிய மாநாட்டின் நான்காவது நாள் கூட்டத்தில் பேசும் அதிபர் டொனால்ட் டிரம்ப்.

வாஷிங்டன்: அமெரிக்காவில் வரும் நவம்பா் மாதம் நடைபெறவிருக்கும் அதிபா் தோ்தலில், குடியரசு கட்சி வேட்பாளராக தற்போதைய அதிபர் டொனால்ட் டிரம்ப் அதிகாரப்பூா்வமாகத் தோ்ந்தெடுக்கப்பட்டாா். இதனை ஏற்றுக்கொண்ட டிரம்ப், தான் மீண்டும் அதிபரானதும் அமெரிக்காவை "வரலாற்றில் மிகப் பெரிய பொருளாதார கட்டமைப்பை" கொண்ட நாடாக உருவாக்கப் போவதாக கூறினார். 

அமெரிக்காவில் அடுத்த அதிபா் தோ்தல் வரும் நவம்பா் 3 ஆம் தேதி நடைபெறவுள்ளது. அந்தத் தோ்தலில், முக்கிய கட்சிகளான ஜனநாயகக் கட்சியின் சாா்பில் முன்னாள் துணை அதிபா் ஜோ பிடனும், குடியரசுக் கட்சி சாா்பில் தற்போதைய அதிபா் டொனால்ட் டிரம்ப்பும் போட்டியிடுவது அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. 

இந்த நிலையில் நேற்று வியாழக்கிழமை வெள்ளை மாளிகையில் நடைபெற்ற குடியரசுக் கட்சியின் தேசிய மாநாட்டில் உரையாற்றிய டிரம்ப், "எனது சக அமெரிக்கர்களே, இன்றிரவு நன்றியுணர்வு மற்றும் நம்பிக்கையுடனும் நிறைந்த இதயத்துடன், அமெரிக்காவின் அதிபர் வேட்பாளருக்கான இந்த பரிந்துரையை நான் ஏற்றுக்கொள்கிறேன்."

வெள்ளை மாளிகையின் தெற்கு புல்வெளிபகுதியில் நடைபெற்று வரும் குடியரசு கட்சியின் தேசிய மாநாட்டிற்கு மனைவி மெலனியாவுடன் வந்த அதிபர் டிரம்ப்.

"கடந்த நான்கு ஆண்டுகளில்உங்களின் ஆதரவோடு நம்பமுடியாத முன்னேற்றத்தை எங்களால் கொண்டுவர முடிந்ததாக பெருமிதத்துடன் பேசிய டிரம்ப், அடுத்த நான்கு ஆண்டுகளில் அமெரிக்காவிற்கான பிரகாசமான எதிர்காலத்திற்கான கட்டமைப்பை உருவாக்குவோம்." 

நாட்டில் இதுவரை நடந்த தேர்தல்களிலேயே இந்த தேர்தல்தான் முக்கிய தேர்தலாக இருக்கப் போகிறது. அமெரிக்கர்களின் நலன் காக்கப்படுமா என்பதை தீர்மானிக்கும் தேர்தல். அனைத்து எதிர்ப்புகளையும், ஆபத்துக்களையும் கடந்து நாம் மீண்டும் உயரத்தை எட்டுவோம். சட்டத்தை மதிக்கும் அமெரிக்கார்களுக்கு வாக்களிக்க இருக்கிறோமா அல்லது நாட்டுக்கு அச்சுறுத்தலாக இருப்பவர்களுக்கு வாக்களிக்க இருக்கிறோமா என்பதை தீர்மானிக்கும் தேர்தல் இது. 

குடியரசு கட்சியின் தேசிய மாநாட்டிற்கு மனைவி மெலனியாவுடன் வந்த பேரன் தியோடர் ஜேம்ஸ் குஷ்னரை அதிபர் டிரம்ப் முத்தமிட்டார். 

மேலும்,  தான் மீண்டும் அதிபரானதும் அமெரிக்காவை "வரலாற்றில் மிகப் பெரிய பொருளாதார கட்டமைப்பை" கொண்ட நாடாக உருவாக்கப் போவதாகவும், "அமெரிக்கா விரைவில் முழு வேலைவாய்ப்புக்கு" திரும்பும் என்றும் டிரம்ப் கூறினார்.

முன்னதாக அமெரிக்க துணை அதிபர் வேட்பாளருக்கான பரிந்துரையை மைக் பென்ஸ் புதன்கிழமை  ஏற்றுக்கொண்டார்.

டிரம்ப் மேடைக்கு வருவதற்கு முன்பு அதிபர் டிரம்பை அவரது மகள் இவாங்கா அறிமுகப்படுத்தினார். டிரம்ப் மைய நிலைக்கு வந்தபோது "இன்னும் நான்கு ஆண்டுகள்" என்று கூட்டத்தில் இருந்தவர்கள் கோஷமிட்டனர். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com